PAT 3.2.10

எனக்கினியான் மணிவண்ணன்

243 என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை *
கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய *
பொன்திகழ்மாடப் புதுவையர்கோன்பட்டன்சொல் *
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே. (2)
243 ## ĕṉṟum ĕṉakku iṉiyāṉai * ĕṉ maṇivaṇṇaṉai *
kaṉṟiṉ piṉ pokkiṉeṉ ĕṉṟu * acotai kazhaṟiya **
pŏṉ tikazh māṭap * putuvaiyarkoṉ paṭṭaṉ cŏl *
iṉ tamizh mālaikal̤ vallavarkku * iṭar illaiye (10)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

243. Pattan, the chief of Puduvai filled with palaces that shine like gold composed a garland of sweet Tamil pāsurams that describe how Yashodā was worried when she sent her sweet sapphire-colored son to graze the calves. Those who recite these pāsurams will have no difficulties in their lives.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்றும் எனக்கு என்றும் எனக்கு; இனியானை இனிமையானவனை; என் மணி வண்ணனை என் நீலமணி போன்றவனை; கன்றின் பின் மாடு மேய்க்க கன்றுகளின் பின்; போக்கினேன் என்று அனுப்பினேன் என்று; அசோதை கழறிய யசோதை மனம் வருந்தியதை; பொன் திகழ் அழகிய பொன்னொளிர்; மாட மாடங்கள் நிறைந்த; புதுவையர் கோன் ஸ்ரீவில்லிபுத்தூர் பெம்மான்; பட்டன் சொல் பெரியாழ்வார் பாடிய; இன் தமிழ் மாலைகள் இனிய தமிழ்ப் பாசுரங்களை; வல்லவர்க்கு ஓதவல்லவர்களுக்கு; இடர் இல்லையே துன்பம் இல்லையே
vallavarkku those who recite; iṉ tamiḻ mālaikal̤ these pasurams; paṭṭaṉ cŏl composed by Periyazhwar; putuvaiyar koṉ of Srivilliputhur; māṭa that is filled with places; pŏṉ tikaḻ which shine like gold; acotai kaḻaṟiya describing how Yashoda became worried; pokkiṉeṉ ĕṉṟu after sending; ĕṉṟum ĕṉakku her always; iṉiyāṉai sweet; ĕṉ maṇi vaṇṇaṉai sapphire-colored son; kaṉṟiṉ piṉ to graze the cattle; iṭar illaiye will have no difficulties in their lives