Chapter 2
Yasoda lamenting after sending Kannan to herd the cows - (அஞ்சன வண்ணனை)
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்
Yashoda sent Krishna to the forest to graze the cows. However, she couldn't bear his absence. Her heart melts as she thinks, "How could I send my beloved son to a forest full of stones and thorns instead of keeping him here?" She reminisces about all his mischiefs and speaks about them with fondness. The āzhvār also experiences these feelings in the same way.
மாடு மேய்க்கக் கண்ணனை யசோதை காட்டிற்கு அனுப்பி விட்டாள். ஆனல் அவனது பிரிவைத் தாளமுடியவில்லை. "என் அன்பு மகனை இங்கேயே இருக்கச் செய்யாமல் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டிற்கு அனுப்பிவிட்டேனே" என்று மனம் கரைந்து அவனது தீம்புகளை எல்லாம் நினைத்து அனுபவித்துப் பேசுகிறாள். ஆழ்வாரும் அதை அப்படியே அனுபவிக்கிறார்.
Verses: 234 to 243
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Getting freed from all hurdles
- PAT 3.2.1
234 ## அஞ்சன வண்ணனை * ஆயர் கோலக் கொழுந்தினை *
மஞ்சனம் ஆட்டி * மனைகள்தோறும் திரியாமே **
கஞ்சனைக் காய்ந்த * கழல் அடி நோவக் கன்றின்பின் *
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்? * எல்லே பாவமே (1) - PAT 3.2.2
235 பற்றுமஞ்சள் பூசிப் * பாவைமாரொடு பாடியில் *
சிற்றில் சிதைத்து எங்கும் * தீமை செய்து திரியாமே **
கற்றுத் தூளியுடை * வேடர் கானிடைக் கன்றின் பின் *
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்? * எல்லே பாவமே (2) - PAT 3.2.3
236 நன்மணி மேகலை * நங்கைமாரொடு நாள்தொறும் *
பொன்மணி மேனி * புழுதியாடித் திரியாமே **
கல்மணி நின்று அதிர் * கான் அதரிடைக் கன்றின்பின் *
என் மணிவண்ணனைப் போக்கினேன் * எல்லே பாவமே (3) - PAT 3.2.4
237 வண்ணக் கருங்குழல் * மாதர் வந்து அலர் தூற்றிடப் *
பண்ணிப் பல செய்து * இப் பாடி எங்கும் திரியாமே **
கண்ணுக்கு இனியானைக் * கான் அதரிடைக் கன்றின்பின் *
எண்ணற்கு அரியானைப் போக்கினேன் * எல்லே பாவமே (4) - PAT 3.2.5
238 அவ்வவ் இடம் புக்கு * அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் *
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் * கூழைமை செய்யாமே **
எவ்வும் சிலை உடை * வேடர் கானிடைக் கன்றின் பின் *
தெய்வத் தலைவனைப் போக்கினேன் * எல்லே பாவமே (5) - PAT 3.2.6
239 மிடறு மெழுமெழுத்து ஓட * வெண்ணெய் விழுங்கிப் போய் *
படிறு பல செய்து * இப் பாடி எங்கும் திரியாமே **
கடிறு பல திரி * கான் அதரிடைக் கன்றின் பின் *
இடற என்பிள்ளையைப் போக்கினேன் * எல்லே பாவமே (6) - PAT 3.2.7
240 வள்ளி நுடங்கு இடை * மாதர் வந்து அலர் தூற்றிட *
துள்ளி விளையாடித் * தோழரோடு திரியாமே **
கள்ளி உணங்கு * வெங்கான் அதரிடைக் கன்றின் பின் *
புள்ளின் தலைவனைப் போக்கினேன் * எல்லே பாவமே (7) - PAT 3.2.8
241 பன்னிரு திங்கள் * வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் *
என் இளங் கொங்கை * அமுதம் ஊட்டி எடுத்து யான் **
பொன்னடி நோவப் * புலரியே கானில் கன்றின் பின் *
என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன் * எல்லே பாவமே (8) - PAT 3.2.9
242 குடையும் செருப்பும் கொடாதே * தாமோதரனை நான் *
உடையும் கடியன * ஊன்று வெம் பரற்கள் உடை **
கடிய வெங் கானிடைக் * கால் அடி நோவக் கன்றின் பின் *
கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன் * எல்லே பாவமே (9) - PAT 3.2.10
243 ## என்றும் எனக்கு இனியானை * என் மணிவண்ணனை *
கன்றின் பின் போக்கினேன் என்று * அசோதை கழறிய **
பொன் திகழ் மாடப் * புதுவையர்கோன் பட்டன் சொல் *
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு * இடர் இல்லையே (10)