PAT 3.2.9

தாமோதரன்

242 குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான் *
உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை *
கடியவெங்கானிடைக் காலடிநோவக்கன்றின்பின் *
கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே.
242
kudaiyum seruppum kodādhE * dhāmOdharanai n^ān *
udaiyum kadiyana oonRu * vemparaRkaLudai *
kadiya veNGgānidai * kāladi n^Ova kanRinpin *
kodiyEn enpiLLaiyai pOkkinEn * ellE pāvamE! * 9.

Ragam

சங்கராபரண

Thalam

ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

242. Yashodā says, “I have sent my son Damodaran behind the calves without giving him an umbrella and sandals to go in the terrible forest, where broken, hard, rough stones will hurt his feet. Cruelly, I have sent my son to the forest. What a terrible thing I have done!”

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குடையும் செருப்பும் குடையும் செருப்பும்; கொடாதே கொடுக்காமல்; தாமோதரனை நான் என் தாமோதரனை நான்; உடையும் உடைந்து; கடியன ஊன்று கூரியனவாய்க் கொண்டு உறுத்தும்; வெம் கால் வைக்க ஒண்ணாத; பரற்கள் உடை பரல்கள் கற்கள் உடைய; கடிய வெங் கடுமையாகத் தகிக்கும் வெப்பம் உடைய; கானிடை காட்டிற்கு; காலடி நோவ பாதங்கள் நோக; கன்றின்பின் மாடு மேய்க்க; என் பிள்ளையை என் அருமை மகனை; கொடியேன் கொடியவளான நான்; போக்கினேன் அனுப்பினேனே!; எல்லே பாவமே அந்தோ என்ன பாவம் செய்தேன்!