PAT 3.2.1

கண்ணனை அன்னை கன்றின்பின் போக்கியதெண்ணி மனம் இரங்குதல் ஆயர் குலக் கொழுந்து ?

234 அஞ்சனவண்ணனை ஆயர்கோலக்கொழுந்தினை *
மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே *
கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின் *
என்செயப்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. (2)
234 ## añcaṉa vaṇṇaṉai * āyar kolak kŏzhuntiṉai *
mañcaṉam āṭṭi * maṉaikal̤toṟum tiriyāme **
kañcaṉaik kāynta * kazhal aṭi novak kaṉṟiṉpiṉ *
ĕṉcĕyap pil̤l̤aiyaip pokkiṉeṉ? * ĕlle pāvame (1)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

234. Yashodā says, “I bathed the dear kohl-colored child of the cowherd clan in turmeric water and sent him out to go behind the calves because I didn’t want him wandering from house to house. But how could I send my child who fought Kamsan without worrying that his ankleted feet would hurt as he went behind the calves? O, What a terrible thing have I done!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அஞ்சன மைபோன்ற கருத்த; வண்ணனை நிறத்தையுடையவனை; ஆயர் குல ஆயர் குல; கொழுந்தினை தலைவனை; மஞ்சனம் ஆட்டி நீராட்டி; மனைகள் தோறும் மற்றவர்கள் வீடுகளுக்கு; திரியாமே சென்று திரிந்துகொண்டிராமல் இருக்க; கஞ்சனை கம்சனை; காய்ந்த உதைத்த; கழல் அடி வீரகழல் அணிந்த; நோவ பாதங்கள் நோக; கன்றின் பின் மாடு மேய்க்க போவென்று; என்செயப் பிள்ளையை ஏனோ குழந்தையை; போக்கினேன் அனுப்பினேன்; எல்லே பாவமே! அந்தோ என்னபாவம் செய்தேனோ!
kŏḻuntiṉai He is the Leader; āyar kula of cowherd clan; vaṇṇaṉai the One with the complexion of; añcaṉa black kohl; mañcaṉam āṭṭi I bathed Him; kaṉṟiṉ piṉ then sent Him to go behind the cows; tiriyāme to prevent Him from; maṉaikal̤ toṟum going to other people houses; nova it must have caused pain in His feet; kaḻal aṭi that has anklets; kāynta that once hit and killed; kañcaṉai kamsan; pokkiṉeṉ why have I sent; ĕṉcĕyap pil̤l̤aiyai my child; ĕlle pāvame! what a sinful thing I have done