PAT 3.2.8

பன்னிரு திங்கள் கருவில் இருந்தவன்

241 பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால் *
என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான் *
பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின் *
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே.
241 paṉṉiru tiṅkal̤ * vayiṟṟil kŏṇṭa ap pāṅkiṉāl *
ĕṉ il̤aṅ kŏṅkai * amutam ūṭṭi ĕṭuttu yāṉ **
pŏṉṉaṭi novap * pulariye kāṉil kaṉṟiṉ piṉ *
ĕṉ il̤añ ciṅkattaip pokkiṉeṉ * ĕlle pāvame (8)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

241. Yashodā says, “I bore him in my womb for twelve months and out of fondness I fed him nectar-like milk from my young breasts. Now I have sent my young lion-like son, behind the calves to the dry forest where he will hurt his golden feet. O, What a terrible thing I have done!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பன்னிரு திங்கள் பன்னிரண்டு மாதங்கள்; வயிற்றில் வயிற்றில்; கொண்ட அப் பாங்கினால் சுமந்த பாசத்தால்; என் இளங் கொங்கை அமுதம் என் தாய்ப்பால்; ஊட்டி எடுத்து யான் ஊட்டி வளர்த்த நான்; பொன்னடி நோவ பொன் போன்ற அழகிய பாதங்கள் நோக; கானில் புலரியே விடியற்காலையிலேயே காட்டிற்கு; கன்றின் பின் மாடு மேய்க்க கன்றுகளின் பின்னால்; என் இளஞ்சிங்கத்தை என் சிங்கக் குட்டியான சிறுவனை; போக்கினேன் அனுப்பினேனே; எல்லே பாவமே! அந்தோ என்ன பாவம் செய்தேன்!
kŏṇṭa ap pāṅkiṉāl I bore Him happily for; paṉṉiru tiṅkal̤ twelve months; vayiṟṟil in my womb; ĕṉ il̤aṅ kŏṅkai amutam I gave my milk; ūṭṭi ĕṭuttu yāṉ to Him; pokkiṉeṉ I sent; ĕṉ il̤añciṅkattai my Son, who is like a young lion; kaṉṟiṉ piṉ to go behind the cattle; kāṉil pulariye in the morning and in the forest path; pŏṉṉaṭi nova which is bound to hurt His beautiful golden feet; ĕlle pāvame! what a sinful thing I have done