10

Thiru Pullambudangudi

திருப்புள்ளம்பூதங்குடி

Thiru Pullambudangudi

ஸ்ரீ பொற்றாமரையாள் ஸமேத ஸ்ரீ வல்வில்ராமாய நமஹ

The moolavar Valvil Raman is in a reclining posture, called Bhujanga Sayanam and the Thayar Hemambujavalli - Potramaraiyal. The Theertham is Jatayu Theertham and the Vimanam Sobana Vimanam.

As per sthala puranam the temple is located at the spot where Lord Rama has rested after offering moksham to Jatayu. The deity of Sri Sita is not seen with the + Read more
பொதுவாக இராமர் நின்ற திருக்கோலத்தில் தான் சேவை சாதிப்பார். இந்த ஸ்தலத்திலும், பாண்டியநாட்டு திவ்யதேசமான திருப்புல்லாணியிலும் சயன (கிடந்த) திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

இங்கே எழுந்தருளி இருக்கும் யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொண்டால், உத்யோகம் கிடைப்பது, மற்றும் + Read more
Thayar: Sri Potrāmaraiyāl (HemābjaValli)
Moolavar: Sri Valviliramar
Utsavar: Sri Valviliramar
Vimaanam: Sobana
Pushkarani: Jadāyu Theertham, Kruthra Theertham
Thirukolam: Sayana (Reclining)
Direction: East
Mandalam: Chozha Nādu
Area: Kumbakkonam
State: TamilNadu
Sampradayam: Vadakalai
Timings: 7:00 a.m. to 12:00 noon 5:00 p.m. to 8:00 p.m.
Search Keyword: Pullambudangudi
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 5.1.1

1348 அறிவதரியான் அனைத்துலகுமுடையான் என்னையாளுடையான் *
குறியமாணியுருவாய கூத்தன்மன்னியமருமிடம் *
நறியமலர்மேல்சுரும்பார்க்க எழிலார்மஞ்ஞைநடமாட *
பொறிகொள்சிறைவண்டு இசைபாடும் புள்ளம்பூதங்குடிதானே. (2)
1348 ## அறிவது அறியான் அனைத்து உலகும்
உடையான் * என்னை ஆள் உடையான் *
குறிய மாணி உரு ஆய *
கூத்தன் மன்னி அமரும் இடம் ** -
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க *
எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட *
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் * -
புள்ளம்பூதங்குடி-தானே-1
1348. ##
aRivathariyāNn anaiththulagum udaiyāNn * ennaiyāLudaiyān *
kuRiyamāNu uruvāya * kooththan manni_amarumidam *
naRiyamalarmEl surumpārkka * ezhilārmaNYNYai nadamāda *
poRikoLsiRai vaNdisaipādum * puLLampoothaNGkudithānE (5.1.1)

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1348. The lord who is a dancer, my ruler and the ruler of the whole world, is hard for anyone to know. The lord who went to Mahābali as a dwarf and measured the world and the sky stays happily in beautiful Pullambudangudi where surumbu bees swarm around the fragrant flowers, beautiful peacocks dance and bees with lined wings sing.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அறிவது அரியான் தம் முயற்சியாலே அறியமுடியாதவனும்; அனைத்து உலகும் எல்லாவுலகங்களையும்; உடையான் தன்வசத்தில் வைத்திருப்பவனும்; என்னை என்னை; ஆளுடையான் அடிமை கொண்டவனும்; குறிய மாணி வாமநப்ரஹ்மசாரியாக; உரு ஆய வந்தவனும்; கூத்தன் மாயனுமான எம்பெருமான்; மன்னி அமரும் இடம் அமர்ந்து இருக்குமிடம்; சுரும்பு சுரும்பு என்னும் வண்டுகள்; நறிய மணம்மிக்க; மலர் மேல் புஷ்பங்களின் மீது; ஆர்க்க ரீங்காரம் செய்யும்; எழிலார் மஞ்ஞை அழகிய மயில்கள்; நடமாட நடனமாடும்; பொறி கொள் வரியையும்; சிறை சிறகையுமுடைய; வண்டு வண்டினங்கள்; இசைபாடும் இசைபாடும்; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்

PT 5.1.2

1349 கள்ளக்குறளாய்மாவலியைவஞ்சித்து உலகம்கைப்படுத்து *
பொள்ளைக்கரத்தபோதகத்தின் துன்பம்தவிர்த்த புனிதனிடம் *
பள்ளச்செறுவில்கயலுகளப் பழனக்கழனியதனுள்போய் *
புள்ளுப்பிள்ளைக்கிரைதேடும் புள்ளம்பூதங்குடிதானே.
1349 கள்ளக் குறள் ஆய் மாவலியை
வஞ்சித்து * உலகம் கைப்படுத்து *
பொள்ளைக் கரத்த போதகத்தின் *
துன்பம் தவிர்த்த புனிதன் இடம் * -
பள்ளச் செறுவில் கயல் உகளப் *
பழனக் கழனி-அதனுள் போய் *
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் * -
புள்ளம்பூதங்குடி-தானே-2
1349
kaLLakkuRaLāy māvaliyaivanchiththu * ulagam kaippaduththu *
poLLaikkaraththa pOthagaththin * thunbamthavirththa punithanidam *
paLLachcheRuvil kayalugaLap * pazhanakkazhani athanuLpOy *
puLLuppiLLaikku iraithEdum * puLLampoothaNGkudithānE (5.1.2)

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1349. Our faultless lord, the sweet thief who went as a dwarf to the king Mahabali, cheated him and took the earth and sky and who saved the long-trunked elephant Gajendra when it was caught by a crocodile stays happily in beautiful Pullambudangudi where birds searching for food for their nestlings fly to the fertile fields to catch the frolicking kāyal fish.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கள்ளக் கபடமுள்ள; குறளாய் வாமனனாய்; மாவலியை மகாபலியை; வஞ்சித்து ஏமாற்றி; உலகம் உலகங்களை; கைப்படுத்து கைப்பற்றினவனும்; பொள்ளைக் த்வாரமுள்ள; கரத்த தும்பிக்கையையுடைய; போதகத்தின் துன்பம் யானையின் துயரத்தைப்; தவிர்த்த போக்கியருளினவனுமான; புனிதன் இடம் புனிதன் இருக்குமிடம்; பள்ளச் செறுவில் தாழ்ந்த கழனிகளில்; கயல் மீன்கள்; உகள துள்ளி விளையாடும்; புள்ளு பறவைகள்; பழன நீர் நிலைகளையுடைய; கழனி கழனிகளின்; அதனுள்போய் உள்ளே போய்; பிள்ளைக்கு தன் குஞ்சுகளுக்கு; இரை தேடும் இரை தேடும்; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்

PT 5.1.3

1350 மேவாஅரக்கர்தென்னிலங்கை வேந்தன்வீயச்சரம்துரந்து *
மாவாய்பிளந்துமல்லடர்த்து மருதம்சாய்த்தமாலதிடம் *
காவார்தெங்கின்பழம்வீழக் கயல்கள்பாயக்குருகிரியும் *
பூவார்கழனிஎழிலாரும் புள்ளம்பூதங்குடிதானே.
1350 மேவா அரக்கர் தென் இலங்கை *
வேந்தன் வீயச் சரம் துரந்து *
மா வாய் பிளந்து மல் அடர்த்து *
மருதம் சாய்த்த மாலது இடம் ** -
கா ஆர் தெங்கின் பழம் வீழக் *
கயல்கள் பாயக் குருகு இரியும் *
பூ ஆர் கழனி எழில் ஆரும் * -
புள்ளம்பூதங்குடி-தானே-3
1350
mEvāvarakkar thennilangai * vEnthanveeyach saramthuranthu *
māvāypiLanthu malladarththu * maruthamsāyththa mālathidam *
kāvārthengin pazhamveezhak * kayalgaLpāyak kurukiriyum *
poovārkazhani ezhilārum * puLLampoothaNGkudithānE (5.1.3)

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1350. Our lord Thirumāl who shot his arrows and defeated the king of southern Lankā and the Rākshasas, killed the Asuran Kesi splitting open his mouth when he came as a horse, and who killed the wrestlers when they came as Marudam trees stays happily in beautiful Pullambudangudi where, when coconuts fall from the trees into the water, fish jump up and cranes run away in fright in the lovely fields filled with beautiful blossoms.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மேவா தனக்கு ஈடுஇணையில்லாத; அரக்கர் அரக்கர்; தென் இலங்கை தென் இலங்கை; வேந்தன் அரசன் ராவணன்; வீய அழிய; சரம் துரந்து அம்புகள் எய்தவனும்; மாவாய் குதிரையாக வந்த கேசி என்னும்; பிளந்து அசுரனின் வாயைப் பிளந்தவனும்; மல் அடர்த்து மல்லர்களை அடக்கியவனும்; மருதம் இரட்டை மருத மரங்களை; சாய்த்த முறித்தவனுமான; மாலது இடம் எம்பெருமானுடைய இருப்பிடம்; கா ஆர் நெருங்கியிருக்கும் தோட்டங்களின்; தெங்கின் தென்னை மரங்களிலிருந்து; பழம் வீழ தேங்காய்கள் கீழே விழ; கயல்கள் பாய மீன்கள் துள்ளி ஓட; குருகு இரியும் நாரைகள் சிதறிப் பாய; பூ ஆர் கழனி தாமரை பூக்கள் நிறைந்த; எழில் ஆரும் கழனிகளினால் அழகுடைய; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்

PT 5.1.4

1351 வெற்பால்மாரிபழுதாக்கி விறல்வாளரக்கர்தலைவன்தன் *
வற்பார்திரள்தோள்ஐந்நான்கும் துணித்தவல்வில் இராமனிடம் *
கற்பார்புரிசைசெய்குன்றம் கவினார்கூடம்மாளிகைகள் *
பொற்பார்மாடம்எழிலாரும் புள்ளம்பூதங்குடிதானே.
1351 வெற்பால் மாரி பழுது ஆக்கி *
விறல் வாள் அரக்கர் தலைவன்-தன் *
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும் *
துணித்த வல் வில் இராமன் இடம் ** -
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம் *
கவின் ஆர் கூடம் மாளிகைகள் *
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும் * -
புள்ளம்பூதங்குடி-தானே-4
1351
veRpālmāri pazhuthākki * viRalvāLarakkar thalaivan_than *
vaRpār_thiraLthOL ain^n^ān_gum * thuNiththavalvil irāmanidam *
kaRpārpurisai seykunRam * kavinār_koodam māLigaigaL *
poRpārmādam ezhilārum * puLLampoothaNGkudithānE (5.1.4)

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1351. Our dear god, who fought with the heroic Rakshasā Rāvana, king of Lankā with strong arrows, and cut off his twenty mighty arms, and who carried Govardhanā mountain and blocked the storm to save the cows and the cowherds stays happily in beautiful Pullambudangudi- filled with strong forts, mounds and beautiful palaces with porches that shine like gold.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெற்பால் கோவர்த்தன மலையினால்; மாரி பழுது பெரும் மழையை; ஆக்கி தடுத்தவனும்; விறல் பலசாலியான; வாள் அரக்கர் ஆயுதத்தையுடைய அரக்கர்; தலைவன் தன் தலைவன் இராவணனின்; வற்பு ஆர் திரள் திண்மையான திரண்ட; ஐந் நான்கும் இருபது; தோள் துணித்த தோள்களையும் துணித்த; வல் வலிய; வில் சார்ங்கத்தையுடையவனான; இராமன் இடம் இராமன் இடம்; கற்பு ஆர் சிறந்த வேலைப்பாட்டோடு; புரிசைசெய் கூடின மதிள்களாலும்; குன்றம் கவின் மலைகளாலும் அழகிய; ஆர் கூடம் க்ருஹங்களாலும்; மாளிகைகள் மாளிகைகளாலும்; பொற்பு ஆர் அழகிய மதிப்புள்ள; மாடம் மண்டபங்களினாலும்; எழில் ஆரும் பூர்ணமான அழகுடன் கூடிய; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்

PT 5.1.5

1352 மையார்தடங்கண்கருங்கூந்தல் ஆய்ச்சிமறையவைத்த தயிர் *
நெய்யார்பாலோடுஅமுதுசெய்த நேமியங்கைமாயனிடம் *
செய்யார்ஆரல்இரைகருதிச் செங்கால்நாரை சென்றணையும் *
பொய்யாநாவில்மறையாளர் புள்ளம்பூதங்குடிதானே.
1352 மை ஆர் தடங் கண் கருங் கூந்தல் *
ஆய்ச்சி மறைய வைத்த தயிர் *
நெய் ஆர் பாலோடு அமுது செய்த *
நேமி அங் கை மாயன் இடம் ** -
செய் ஆர் ஆரல் இரை கருதிச் *
செங் கால் நாரை சென்று அணையும் *
பொய்யா நாவின் மறையாளர் * -
புள்ளம்பூதங்குடி-தானே-5
1352
maiyār_thadankaN karunkoonthal * āychcimaRaiya vaiththathayir *
neyyār_pālOdu amuthucheytha * nEmiyangai māyanidam *
cheyyār_āral iraikaruthich * chengāl_nārai chenRaNaiyum *
poyyā_nāvin maRaiyāLar * puLLampoothaNGkudithānE (5.1.5)

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1352. Our lord Māyan with a discus in his hand who stole the yogurt, ghee and milk hidden by Yashodā, the dark-haired, large-eyed cowherdess with eyes blackened with kohl, stays happily in beautiful Pullambudangudi where cranes with red legs go to the flourishing fields and search for red aral fish to eat and the Vediyars, never telling lies, recite the Vedās.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மை ஆர் மையணிந்த; தடங் கண் விசாலமான கண்களையுடைய; கருங் கூந்தல் கறுத்த கூந்தலை; ஆய்ச்சி உடையவளுமான ஆய்ச்சி; மறைய மறைத்து; வைத்த தயிர் வைத்த தயிரையும்; நெய் ஆர் நெய்யையும்; பாலோடு பாலையும்; அமுது செய்த அமுது செய்தவனும்; நேமி சக்கரத்தை; அங் கை அழகிய கையிலுடைய; மாயன் இடம் மாயன் இருக்கும் இடம்; செய் ஆர் கழனிகளில் நிறைந்திருக்கும்; ஆரல் ஆரல் மீன்களை; இரை கருதி உணவாகக் கருதி; செங் கால் சிவந்த கால்களையுடைய; நாரை நாரைகள்; சென்று அணையும் சென்று அணையும்; பொய்யா நாவின் பொய்ப்பேச்சு இல்லாத; மறையாளர் வைதிகர்கள் வாழும்; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்

PT 5.1.6

1353 மின்னினன்னநுண்மருங்குல் வேயேய்தடந்தோள் மெல்லியற்கா *
மன்னுசினத்தமழவிடைகள் ஏழ்அன்றடர்த்தமாலதிடம் *
மன்னுமுதுநீரரவிந்த மலர்மேல் வரிவண்டிசைபாட *
புன்னைபொன்னேய்தாதுதிர்க்கும் புள்ளம்பூதங்குடிதானே.
1353 மின்னின் அன்ன நுண் மருங்குல் *
வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா *
மன்னு சினத்த மழ விடைகள் *
ஏழ் அன்று அடர்த்த மாலது இடம் ** -
மன்னும் முது நீர் அரவிந்த
மலர்மேல் * வரி வண்டு இசை பாட *
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும் * -
புள்ளம்பூதங்குடி-தானே-6
1353
minnin anna nuNmarunkul * vEyEythadanthOL melliyaRkā *
mannuchinaththa mazhavidaikaL * Ezh_anRu_adarththa mālathidam *
mannumuthun^eer aravinthamalarmEl * varivaNdisaipāda *
punnaiponnEy thāthuthirkkum * puLLampoothaNGkudithānE (5.1.6)

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1353. Our lord Thirumāl who fought and killed the seven angry bulls to marry soft Nappinnai with round arms like bamboo and a waist thin as lightning stays happily in beautiful Pullambudangudi where lined bees sing as they swarm around the lotuses blooming in the ponds and the punnai trees shedding golden pollen.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின்னின் அன்ன மின்னலை ஒத்த; நுண் நுட்பமான; மருங்குல் இடையை யுடையவளும்; வேய் ஏய் மூங்கிலை ஒத்த; தடந் தோள் பருத்த தோள்களுடையவளும்; மெல்லியற்கா இளம்பெண் நப்பின்னைக்காக; அன்று முன்பொரு சமயம்; மன்னு சினத்த கோபத்தையுடைய; மழ விடைகள் இளமையான ரிஷபங்கள்; ஏழ் அடர்த்த ஏழையும் அடக்கிய; மாலது இடம் பெருமான் இருக்கும் இடம்; மன்னும் தண்ணீர் வற்றாத; முது நீர் ஆழ்ந்த நீர்நிலைகளிலுள்ள; அரவிந்த மலர் மேல் தாமரைப் பூக்களின் மேல்; வரி வண்டு இசை பாட வரிவண்டுகள் இசைபாட; புன்னை புன்னை மரங்கள்; பொன் பொன்னிறமான; ஏய் தாது உதிர்க்கும் தாதுகளை உதிர்க்கும்; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்

PT 5.1.7

1354 குடையாவிலங்கல் கொண்டேந்திமாரிபழுதாநிரைகாத்து *
சடையானோடஅடல்வாணன் தடந்தோள்துணித்த தலைவனிடம் *
குடியாவண்டுகள்ளுண்ணக் கோலநீலம்மட்டுகுக்கும் *
புடையார்கழனிஎழிலாரும் புள்ளம்பூதங்குடிதானே.
1354 குடையா விலங்கல் கொண்டு ஏந்தி *
மாரி பழுதா நிரை காத்து *
சடையான் ஓட அடல் வாணன் *
தடந் தோள் துணித்த தலைவன் இடம் ** -
குடியா வண்டு கள் உண்ணக் *
கோல நீலம் மட்டு உகுக்கும *
புடை ஆர் கழனி எழில் ஆரும் * -
புள்ளம்பூதங்குடி-தானே-7
1354
kudaiyāvilangal koNdEnthi * māripazhuthā niraikāththu *
sadaiyāNn_Oda adalvāNan * thadanthOLthuNiththa thalaivanidam *
kudiyāvaNdu kaLLuNNak * kOla_neelam mattukukkum *
pudaiyār_kazhani ezhilārum * puLLampoothaNGkudithānE (5.1.7)

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1354. Our chief, our lord who carried Govardhanā mountain as an umbrella to protect the cows from the storm, fought with heroic Bānāsuran and cut off his strong arms, and chased off Shivā and the enemy warriors when they came to help the Asuran on the battlefield stays happily in beautiful Pullambudangudi surrounded with flourishing fields and lovely neelam flowers that shed honey for the swarms of bees to drink.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விலங்கல் கோவர்த்தன மலையை; குடையா கொண்டு குடையாக; ஏந்தி தூக்கி; மாரி பழுதா மழை தடுத்து; நிரை காத்து பசுக்களைக் காத்தவனும்; சடையான் ருத்ரன்; ஓட போரில் முதுகு காட்டி ஓடினபின்; அடல் போரிட வந்த; வாணன் பாணாஸுரனுடைய; தடந்தோள் விசாலமான புஜங்களை; துணித்த துணித்தவனுமான; தலைவன் இடம் தலைவன் இருக்குமிடம்; குடியா வண்டுகள் குடும்பமாக வண்டுகள்; உண்ண விருந்து உண்ண; கோல நீலம் மட்டு அழகிய நீலமலர்த் தேனை; உகுக்கும் மகிழ்ந்து பருகும்; புடை ஆர் நாற்புறமும் சூழ்ந்த; கழனி கழனிகளின்; எழில் ஆரும் அழகாலே நிறைந்த; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்

PT 5.1.8

1355 கறையார்நெடுவேல்மறமன்னர்வீய விசயன்தேர்கடவி *
இறையான்கையில்நிறையாத முண்டம்நிறைத்தஎந்தையிடம் *
மறையால்மூத்தீயவைவளர்க்கும் மன்னுபுகழால்வண்மையால் *
பொறையால்மிக்க அந்தணர்வாழ் புள்ளம்பூதங்குடிதானே.
1355 கறை ஆர் நெடு வேல் மற மன்னர்
வீய * விசயன் தேர் கடவி *
இறையான் கையில் நிறையாத *
முண்டம் நிறைத்த எந்தை இடம் * -
மறையால் முத்தீ-அவை வளர்க்கும் *
மன்னு புகழால் வண்மையால் *
பொறையால் மிக்க அந்தணர் வாழ் * -
புள்ளம்பூதங்குடி-தானே-8
1355
kaRaiyār_neduvEl maRamannarveeya * visayan thEr_kadavi *
iRaiyān kaiyil niRaiyātha * muNdam_niRaiththa enthaiyidam *
maRaiyālmooththeeyavai vaLarkkum * mannupugazhāl vaNmaiyāl *
poRaiyālmikka anthaNarvāzh * puLLampoothaNGkudithānE (5.1.8)

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1355. Our father who drove the chariot for Arjunā in the Bhārathā war and destroyed the heroic Kauravās whose long spears were always smeared with blood, and who filled Nānmuhan’s skull that was stuck to Shivā’s hand with his blood and made it fall stays happily in beautiful Pullambudangudi where famous, patient, generous Vediyars perform sacrifices with three fires and recite the Vedās.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கறை ஆர் ரத்தக் கறை மாறதே; நெடு வேல் வேற்படையை யுடையவர்களான; மற மன்னர் துரியோதனாதி அரசர்கள்; வீய மாளும்படி; விசயன் அர்ஜுநனுடைய; தேர் கடவி தேரை நடத்தினவனும்; இறையான் ருத்ரனுடைய; கையில் கையில் ஒட்டியிருந்த; நிறையாத நிரம்பாத; முண்டம் கபாலத்தை; நிறைத்த நிறைத்தவனுமான; எந்தை இடம் எம்பெருமான் இருக்குமிடம்; மறையால் வேதங்களாலும்; முத்தீ அவை மூன்றுவித; வளர்க்கும் வேள்விகளாலும்; மன்னு அதனால் நிலைநின்ற; புகழால் கீர்த்தியினாலும்; வண்மையால் தாராள மனப்பான்மையாலும்; பொறையால் பொறுமையினாலும்; மிக்க மேன்மை பெற்ற; அந்தணர் வாழ் வைதிகர்கள் வாழும்; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்

PT 5.1.9

1356 துன்னிமண்ணும்விண்ணாடும்தோன்றாது இருளாய்மூடியநாள் *
அன்னமாகிஅருமறைகள் அருளிச்செய்த அமலனிடம் *
மின்னுசோதிநவமணியும் வேயின்முத்தும்சாமரையும் *
பொன்னும்பொன்னிகொணர்ந்தலைக்கும் புள்ளம்பூதங்குடிதானே.
1356 துன்னி மண்ணும் விண் நாடும் *
தோன்றாது இருள் ஆய் மூடிய நாள் *
அன்னம் ஆகி அரு மறைகள் *
அருளிச்செய்த அமலன் இடம் ** -
மின்னு சோதி நவமணியும் *
வேயின் முத்தும் சாமரையும் *
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் * -
புள்ளம்பூதங்குடி-தானே-9
1356
thunnimaNNum viNNādum * thOnRāthu_iruLāy moodiyanNāL *
annamāki arumaRaikaL * aruLichcheytha amalanidam *
minnuchOthi navamaNiyum * vEyinmuththum sāmaraiyum *
ponnumponni koNarnthalaikkum * puLLampoothaNGkudithānE (5.1.9)

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1356. Our faultless lord who took the form of a fish, saved the Vedās from the flood and then, as a swan, taught them to the sages when the earth and sky were covered with deep darkness stays happily in beautiful Pullambudangudi where the Ponni river with its waves brings nine types of sparkling jewels, pearls from bamboos, chowries and gold and leaves them all on its banks.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண்ணும் மண்ணுலகமும்; விண் நாடும் விண்ணுலகமும்; துன்னி தோன்றாது ஒன்றும் தெரியாதபடி; இருளாய் ஒரே இருளாய்; மூடிய நாள் மூடிக்கிடந்த போது; அன்னம் ஆகி அன்னமாக அவதரித்து; அரு மறைகள் வேதங்களை; அருளிச்செய்த மீட்டுக்கொடுத்த; அமலன் இடம் புனிதன் இருக்கும் இடம்; மின்னு சோதி பிரகாசமான ஒளியையுடைய; நவமணியும் நவ ரத்தினங்களையும்; வேயின் மூங்கிலின்; முத்தும் முத்துக்களையும்; சாமரையும் சாமரங்களையும்; பொன்னும் பொன்னையும்; பொன்னி காவேரி; கொணர்ந்து கொணர்ந்து; அலைக்கும் சேர்க்கும்; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்

PT 5.1.10

1357 கற்றாமறித்துகாளியன்தன் சென்னிநடுங்கநடம்பயின்ற *
பொற்றாமரையாள்தன்கேள்வன் புள்ளம்பூதங்குடிதன்மேல் *
கற்றார்பரவும் மங்கையர்கோன் காரார்புயற்கைக்கலிகன்றி *
சொல்தான்ஈரைந்திவைபாடச் சோரநில்லா துயர்தாமே (2)
1357 ## கற்றா மறித்து காளியன்-தன் *
சென்னி நடுங்க நடம்பயின்ற *
பொன் தாமரையாள்-தன் கேள்வன் *
புள்ளம்பூதங்குடி-தன்மேல் **
கற்றார் பரவும் மங்கையர்-கோன் *
கார் ஆர் புயல்கைக் கலிகன்றி *
சொல்- தான் ஈர் ஐந்து இவை பாடச் *
சோர நில்லா-துயர்-தாமே-10
1357. ##
kaRRāmaRiththu kāLiyan_than * senni_nadunka nadampayinRa *
poRRāmaraiyāL than_kELvan * puLLampoothangudithanmEl *
kaRRār_paravum mankaiyarkOn * kārār_puyaRkaik kalikanRi *
solthāNn eerainNthivaipādach * sOra_nillāthuyar thāmE (5.1.10)

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1357. Kaliyan, the chief of Thirumangai, as generous as a dark cloud and praised by the learned ones, composed these ten pāsurams on the god of Pullambudangudi, the cowherd, the beloved of Lakshmi seated on a golden lotus who danced on the trembling heads of Kālingan. If devotees learn and recite these ten Tamil pāsurams, they will have no trouble in their lives.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கன்று ஆ கன்றுகளோடு கூடின பசுக்களை; மறித்து மடக்கி மேய்த்தவனும்; காளியன் தன் காளிய நாகத்தின்; சென்னி தலையிலே; நடுங்க நடம் நாகம் நடுங்கும்படி நடனம்; பயின்ற பயின்றவனும்; பொற் தாமரையாள் தாமரைப்பூவிற் பிறந்த; தன் திருமகளின் நாதனுமான; கேள்வன் எம்பெருமான் இருக்குமிடம்; புள்ளம்பூதங்குடி புள்ளம்பூதங்குடி; தன்மேல் விஷயமாக; கற்றார் பாகவதவைபவமறிந்த கற்றவர்களால்; பரவும் கொண்டாடப்படுபவரும்; மங்கையர்கோன் திருமங்கைத் தலைவரும்; கார் ஆர் காளமேகம்போன்ற; புயல்கை உதாரருமான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; சொல் தான் அருளிச்செய்த; ஈர் ஐந்து இப்பத்து பாசுரங்களையும்; இவை பாட பாட வல்லார்க்கு; சோர நில்லா நரகம் போகும்; துயர் தாமே துன்பம் நேராது