PT 5.1.4

வல்வில் இராமன் வாழும் இடம்

1351 வெற்பால்மாரிபழுதாக்கி விறல்வாளரக்கர்தலைவன்தன் *
வற்பார்திரள்தோள்ஐந்நான்கும் துணித்தவல்வில் இராமனிடம் *
கற்பார்புரிசைசெய்குன்றம் கவினார்கூடம்மாளிகைகள் *
பொற்பார்மாடம்எழிலாரும் புள்ளம்பூதங்குடிதானே.
PT.5.1.4
1351 vĕṟpāl māri pazhutu ākki *
viṟal vāl̤ arakkar talaivaṉ-taṉ *
vaṟpu ār tiral̤ tol̤ ain nāṉkum *
tuṇitta val vil irāmaṉ iṭam ** -
kaṟpu ār puricaicĕy kuṉṟam *
kaviṉ ār kūṭam māl̤ikaikal̤ *
pŏṟpu ār māṭam ĕzhil ārum * -
pul̤l̤ampūtaṅkuṭi-tāṉe-4

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1351. Our dear god, who fought with the heroic Rakshasā Rāvana, king of Lankā with strong arrows, and cut off his twenty mighty arms, and who carried Govardhanā mountain and blocked the storm to save the cows and the cowherds stays happily in beautiful Pullambudangudi- filled with strong forts, mounds and beautiful palaces with porches that shine like gold.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெற்பால் கோவர்த்தன மலையினால்; மாரி பழுது பெரும் மழையை; ஆக்கி தடுத்தவனும்; விறல் பலசாலியான; வாள் அரக்கர் ஆயுதத்தையுடைய அரக்கர்; தலைவன் தன் தலைவன் இராவணனின்; வற்பு ஆர் திரள் திண்மையான திரண்ட; ஐந் நான்கும் இருபது; தோள் துணித்த தோள்களையும் துணித்த; வல் வலிய; வில் சார்ங்கத்தையுடையவனான; இராமன் இடம் இராமன் இடம்; கற்பு ஆர் சிறந்த வேலைப்பாட்டோடு; புரிசைசெய் கூடின மதிள்களாலும்; குன்றம் கவின் மலைகளாலும் அழகிய; ஆர் கூடம் க்ருஹங்களாலும்; மாளிகைகள் மாளிகைகளாலும்; பொற்பு ஆர் அழகிய மதிப்புள்ள; மாடம் மண்டபங்களினாலும்; எழில் ஆரும் பூர்ணமான அழகுடன் கூடிய; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்