PT 5.1.6

ஏழு எருதுகளை அடக்கியவன் எழுந்தருளிய இடம்

1353 மின்னினன்னநுண்மருங்குல் வேயேய்தடந்தோள் மெல்லியற்கா *
மன்னுசினத்தமழவிடைகள் ஏழ்அன்றடர்த்தமாலதிடம் *
மன்னுமுதுநீரரவிந்த மலர்மேல் வரிவண்டிசைபாட *
புன்னைபொன்னேய்தாதுதிர்க்கும் புள்ளம்பூதங்குடிதானே.
PT.5.1.6
1353 miṉṉiṉ aṉṉa nuṇ maruṅkul *
vey ey taṭan tol̤ mĕlliyaṟkā *
maṉṉu ciṉatta mazha viṭaikal̤ *
ezh aṉṟu aṭartta mālatu iṭam ** -
maṉṉum mutu nīr aravinta
malarmel * vari vaṇṭu icai pāṭa *
puṉṉai pŏṉ ey tātu utirkkum * -
pul̤l̤ampūtaṅkuṭi-tāṉe-6

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1353. Our lord Thirumāl who fought and killed the seven angry bulls to marry soft Nappinnai with round arms like bamboo and a waist thin as lightning stays happily in beautiful Pullambudangudi where lined bees sing as they swarm around the lotuses blooming in the ponds and the punnai trees shedding golden pollen.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின்னின் அன்ன மின்னலை ஒத்த; நுண் நுட்பமான; மருங்குல் இடையை யுடையவளும்; வேய் ஏய் மூங்கிலை ஒத்த; தடந் தோள் பருத்த தோள்களுடையவளும்; மெல்லியற்கா இளம்பெண் நப்பின்னைக்காக; அன்று முன்பொரு சமயம்; மன்னு சினத்த கோபத்தையுடைய; மழ விடைகள் இளமையான ரிஷபங்கள்; ஏழ் அடர்த்த ஏழையும் அடக்கிய; மாலது இடம் பெருமான் இருக்கும் இடம்; மன்னும் தண்ணீர் வற்றாத; முது நீர் ஆழ்ந்த நீர்நிலைகளிலுள்ள; அரவிந்த மலர் மேல் தாமரைப் பூக்களின் மேல்; வரி வண்டு இசை பாட வரிவண்டுகள் இசைபாட; புன்னை புன்னை மரங்கள்; பொன் பொன்னிறமான; ஏய் தாது உதிர்க்கும் தாதுகளை உதிர்க்கும்; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்