PT 5.1.8

அருச்சுனனின் தேரை ஓட்டியவன் அமரும் இடம்

1355 கறையார்நெடுவேல்மறமன்னர்வீய விசயன்தேர்கடவி *
இறையான்கையில்நிறையாத முண்டம்நிறைத்தஎந்தையிடம் *
மறையால்மூத்தீயவைவளர்க்கும் மன்னுபுகழால்வண்மையால் *
பொறையால்மிக்க அந்தணர்வாழ் புள்ளம்பூதங்குடிதானே.
PT.5.1.8
1355 kaṟai ār nĕṭu vel maṟa maṉṉar
vīya * vicayaṉ ter kaṭavi *
iṟaiyāṉ kaiyil niṟaiyāta *
muṇṭam niṟaitta ĕntai iṭam * -
maṟaiyāl muttī-avai val̤arkkum *
maṉṉu pukazhāl vaṇmaiyāl *
pŏṟaiyāl mikka antaṇar vāzh * -
pul̤l̤ampūtaṅkuṭi-tāṉe-8

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1355. Our father who drove the chariot for Arjunā in the Bhārathā war and destroyed the heroic Kauravās whose long spears were always smeared with blood, and who filled Nānmuhan’s skull that was stuck to Shivā’s hand with his blood and made it fall stays happily in beautiful Pullambudangudi where famous, patient, generous Vediyars perform sacrifices with three fires and recite the Vedās.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கறை ஆர் ரத்தக் கறை மாறதே; நெடு வேல் வேற்படையை யுடையவர்களான; மற மன்னர் துரியோதனாதி அரசர்கள்; வீய மாளும்படி; விசயன் அர்ஜுநனுடைய; தேர் கடவி தேரை நடத்தினவனும்; இறையான் ருத்ரனுடைய; கையில் கையில் ஒட்டியிருந்த; நிறையாத நிரம்பாத; முண்டம் கபாலத்தை; நிறைத்த நிறைத்தவனுமான; எந்தை இடம் எம்பெருமான் இருக்குமிடம்; மறையால் வேதங்களாலும்; முத்தீ அவை மூன்றுவித; வளர்க்கும் வேள்விகளாலும்; மன்னு அதனால் நிலைநின்ற; புகழால் கீர்த்தியினாலும்; வண்மையால் தாராள மனப்பான்மையாலும்; பொறையால் பொறுமையினாலும்; மிக்க மேன்மை பெற்ற; அந்தணர் வாழ் வைதிகர்கள் வாழும்; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்