PT 5.1.10

துயர்நள் விலகிவிடும்

1357 கற்றாமறித்துகாளியன்தன் சென்னிநடுங்கநடம்பயின்ற *
பொற்றாமரையாள்தன்கேள்வன் புள்ளம்பூதங்குடிதன்மேல் *
கற்றார்பரவும் மங்கையர்கோன் காரார்புயற்கைக்கலிகன்றி *
சொல்தான்ஈரைந்திவைபாடச் சோரநில்லா துயர்தாமே (2)
PT.5.1.10
1357 ## கற்றா மறித்து காளியன் தன் *
சென்னி நடுங்க நடம்பயின்ற *
பொன் தாமரையாள் தன் கேள்வன் *
புள்ளம்பூதங்குடி தன்மேல் **
கற்றார் பரவும் மங்கையர் கோன் *
கார் ஆர் புயல்கைக் கலிகன்றி *
சொல் தான் ஈர் ஐந்து இவை பாடச் *
சோர நில்லா துயர் தாமே 10
1357 ## kaṟṟā maṟittu kāl̤iyaṉ-taṉ *
cĕṉṉi naṭuṅka naṭampayiṉṟa *
pŏṉ tāmaraiyāl̤-taṉ kel̤vaṉ *
pul̤l̤ampūtaṅkuṭi-taṉmel **
kaṟṟār paravum maṅkaiyar-koṉ *
kār ār puyalkaik kalikaṉṟi *
cŏl- tāṉ īr aintu ivai pāṭac *
cora nillā-tuyar-tāme-10

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1357. Kaliyan, the chief of Thirumangai, as generous as a dark cloud and praised by the learned ones, composed these ten pāsurams on the god of Pullambudangudi, the cowherd, the beloved of Lakshmi seated on a golden lotus who danced on the trembling heads of Kālingan. If devotees learn and recite these ten Tamil pāsurams, they will have no trouble in their lives.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கன்று ஆ கன்றுகளோடு கூடின பசுக்களை; மறித்து மடக்கி மேய்த்தவனும்; காளியன் தன் காளிய நாகத்தின்; சென்னி தலையிலே; நடுங்க நடம் நாகம் நடுங்கும்படி நடனம்; பயின்ற பயின்றவனும்; பொற் தாமரையாள் தாமரைப்பூவிற் பிறந்த; தன் திருமகளின் நாதனுமான; கேள்வன் எம்பெருமான் இருக்குமிடம்; புள்ளம்பூதங்குடி புள்ளம்பூதங்குடி; தன்மேல் விஷயமாக; கற்றார் பாகவதவைபவமறிந்த கற்றவர்களால்; பரவும் கொண்டாடப்படுபவரும்; மங்கையர்கோன் திருமங்கைத் தலைவரும்; கார் ஆர் காளமேகம்போன்ற; புயல்கை உதாரருமான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; சொல் தான் அருளிச்செய்த; ஈர் ஐந்து இப்பத்து பாசுரங்களையும்; இவை பாட பாட வல்லார்க்கு; சோர நில்லா நரகம் போகும்; துயர் தாமே துன்பம் நேராது

Āchārya Vyākyānam

தாயார் திரு நாமமும் இதில்

கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல் கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10-

கற்றா மறித்து-ஆ கன்று -கற்றா -மேய்த்து

கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற – பசு மேய்க்கை-நித்ய ஸூரிகளுக்கு

+ Read more