PT 5.1.2

யானையின் துயர் தீர்த்தவன் வாழும் இடம்

1349 கள்ளக்குறளாய்மாவலியைவஞ்சித்து உலகம்கைப்படுத்து *
பொள்ளைக்கரத்தபோதகத்தின் துன்பம்தவிர்த்த புனிதனிடம் *
பள்ளச்செறுவில்கயலுகளப் பழனக்கழனியதனுள்போய் *
புள்ளுப்பிள்ளைக்கிரைதேடும் புள்ளம்பூதங்குடிதானே.
PT.5.1.2
1349 kal̤l̤ak kuṟal̤ āy māvaliyai
vañcittu * ulakam kaippaṭuttu *
pŏl̤l̤aik karatta potakattiṉ *
tuṉpam tavirtta puṉitaṉ iṭam * -
pal̤l̤ac cĕṟuvil kayal ukal̤ap *
pazhaṉak kazhaṉi-ataṉul̤ poy *
pul̤l̤u pil̤l̤aikku irai teṭum * -
pul̤l̤ampūtaṅkuṭi-tāṉe-2

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1349. Our faultless lord, the sweet thief who went as a dwarf to the king Mahabali, cheated him and took the earth and sky and who saved the long-trunked elephant Gajendra when it was caught by a crocodile stays happily in beautiful Pullambudangudi where birds searching for food for their nestlings fly to the fertile fields to catch the frolicking kāyal fish.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கள்ளக் கபடமுள்ள; குறளாய் வாமனனாய்; மாவலியை மகாபலியை; வஞ்சித்து ஏமாற்றி; உலகம் உலகங்களை; கைப்படுத்து கைப்பற்றினவனும்; பொள்ளைக் த்வாரமுள்ள; கரத்த தும்பிக்கையையுடைய; போதகத்தின் துன்பம் யானையின் துயரத்தைப்; தவிர்த்த போக்கியருளினவனுமான; புனிதன் இடம் புனிதன் இருக்குமிடம்; பள்ளச் செறுவில் தாழ்ந்த கழனிகளில்; கயல் மீன்கள்; உகள துள்ளி விளையாடும்; புள்ளு பறவைகள்; பழன நீர் நிலைகளையுடைய; கழனி கழனிகளின்; அதனுள்போய் உள்ளே போய்; பிள்ளைக்கு தன் குஞ்சுகளுக்கு; இரை தேடும் இரை தேடும்; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்