PT 5.1.3

மருதம் சாய்த்த மால் மருவும் இடம்

1350 மேவாஅரக்கர்தென்னிலங்கை வேந்தன்வீயச்சரம்துரந்து *
மாவாய்பிளந்துமல்லடர்த்து மருதம்சாய்த்தமாலதிடம் *
காவார்தெங்கின்பழம்வீழக் கயல்கள்பாயக்குருகிரியும் *
பூவார்கழனிஎழிலாரும் புள்ளம்பூதங்குடிதானே.
PT.5.1.3
1350 mevā arakkar tĕṉ ilaṅkai *
ventaṉ vīyac caram turantu *
mā vāy pil̤antu mal aṭarttu *
marutam cāytta mālatu iṭam ** -
kā ār tĕṅkiṉ pazham vīzhak *
kayalkal̤ pāyak kuruku iriyum *
pū ār kazhaṉi ĕzhil ārum * -
pul̤l̤ampūtaṅkuṭi-tāṉe-3

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1350. Our lord Thirumāl who shot his arrows and defeated the king of southern Lankā and the Rākshasas, killed the Asuran Kesi splitting open his mouth when he came as a horse, and who killed the wrestlers when they came as Marudam trees stays happily in beautiful Pullambudangudi where, when coconuts fall from the trees into the water, fish jump up and cranes run away in fright in the lovely fields filled with beautiful blossoms.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மேவா தனக்கு ஈடுஇணையில்லாத; அரக்கர் அரக்கர்; தென் இலங்கை தென் இலங்கை; வேந்தன் அரசன் ராவணன்; வீய அழிய; சரம் துரந்து அம்புகள் எய்தவனும்; மாவாய் குதிரையாக வந்த கேசி என்னும்; பிளந்து அசுரனின் வாயைப் பிளந்தவனும்; மல் அடர்த்து மல்லர்களை அடக்கியவனும்; மருதம் இரட்டை மருத மரங்களை; சாய்த்த முறித்தவனுமான; மாலது இடம் எம்பெருமானுடைய இருப்பிடம்; கா ஆர் நெருங்கியிருக்கும் தோட்டங்களின்; தெங்கின் தென்னை மரங்களிலிருந்து; பழம் வீழ தேங்காய்கள் கீழே விழ; கயல்கள் பாய மீன்கள் துள்ளி ஓட; குருகு இரியும் நாரைகள் சிதறிப் பாய; பூ ஆர் கழனி தாமரை பூக்கள் நிறைந்த; எழில் ஆரும் கழனிகளினால் அழகுடைய; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்