PT 5.1.9

அருமறைகள் அருளியவன் அமரும் இடம்

1356 துன்னிமண்ணும்விண்ணாடும்தோன்றாது இருளாய்மூடியநாள் *
அன்னமாகிஅருமறைகள் அருளிச்செய்த அமலனிடம் *
மின்னுசோதிநவமணியும் வேயின்முத்தும்சாமரையும் *
பொன்னும்பொன்னிகொணர்ந்தலைக்கும் புள்ளம்பூதங்குடிதானே.
PT.5.1.9
1356 tuṉṉi maṇṇum viṇ nāṭum *
toṉṟātu irul̤ āy mūṭiya nāl̤ *
aṉṉam āki aru maṟaikal̤ *
arul̤iccĕyta amalaṉ iṭam ** -
miṉṉu coti navamaṇiyum *
veyiṉ muttum cāmaraiyum *
pŏṉṉum pŏṉṉi kŏṇarntu alaikkum * -
pul̤l̤ampūtaṅkuṭi-tāṉe-9

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1356. Our faultless lord who took the form of a fish, saved the Vedās from the flood and then, as a swan, taught them to the sages when the earth and sky were covered with deep darkness stays happily in beautiful Pullambudangudi where the Ponni river with its waves brings nine types of sparkling jewels, pearls from bamboos, chowries and gold and leaves them all on its banks.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண்ணும் மண்ணுலகமும்; விண் நாடும் விண்ணுலகமும்; துன்னி தோன்றாது ஒன்றும் தெரியாதபடி; இருளாய் ஒரே இருளாய்; மூடிய நாள் மூடிக்கிடந்த போது; அன்னம் ஆகி அன்னமாக அவதரித்து; அரு மறைகள் வேதங்களை; அருளிச்செய்த மீட்டுக்கொடுத்த; அமலன் இடம் புனிதன் இருக்கும் இடம்; மின்னு சோதி பிரகாசமான ஒளியையுடைய; நவமணியும் நவ ரத்தினங்களையும்; வேயின் மூங்கிலின்; முத்தும் முத்துக்களையும்; சாமரையும் சாமரங்களையும்; பொன்னும் பொன்னையும்; பொன்னி காவேரி; கொணர்ந்து கொணர்ந்து; அலைக்கும் சேர்க்கும்; புள்ளம் பூதங்குடிதானே புள்ளம் பூதங்குடி ஆகும்