Chapter 9

Āzhvār calls out to the Lord with heart melting devotion - (நீர் ஆய்)

கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்
Bhagavān doesn’t grace Āzhvār with His presence even after the emissaries were sent to deliver the messages. Āzhvār cries out, “Please come! When you do, it will be a day when both this material realm (maNNum) and your spiritual realm (viNNum) will rejoice.”
தூது விட்டனுப்பியும் எம்பெருமான் வரவில்லை. “வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே!” என்று ஆழ்வார் கூவியழைக்கிறார்.
Verses: 3431 to 3441
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: காந்தாரம்
Timing: 7.13 - 8.24 AM
Recital benefits: will become his devotees
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 6.9.1

3431 நீராய்நிலனாய்த் தீயாய்க்காலாய்நெடுவானாய் *
சீரார்சுடர்க்களிரண்டாய்ச் சிவனாயனானாய்! *
கூராராழிவெண்சங்கேந்திக் கொடியேன்பால்
வாராய் * ஒருநாள் மண்ணும்விண்ணும்மகிழவே. (2)
3431 ## நீர் ஆய் நிலன் ஆய்த் * தீ ஆய் கால் ஆய் நெடு வான் ஆய்க் *
சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய்ச் * சிவன் ஆய் அயன் ஆனாய் **
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்திக் * கொடியேன்பால்
வாராய் * ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே (1)
3431 ## nīr āy nilaṉ āyt * tī āy kāl āy nĕṭu vāṉ āyk *
cīr ār cuṭarkal̤ iraṇṭu āyc * civaṉ āy ayaṉ āṉāy **
kūr ār āzhi vĕṇ caṅku entik * kŏṭiyeṉpāl
vārāy * ŏrunāl̤ maṇṇum viṇṇum makizhave (1)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Lord, you permeate all elements, from the Sun to the Moon, from Shiva to Vishnu, as the internal controller of everything. I beseech you to grace this humble sinner with Your presence, even if just for a day, holding your mighty discus and the sacred white conch, bringing joy to both SriVaikuntam and the Earth.

Explanatory Notes

The Āzhvār could certainly cognise the Universal Form of the Lord, in the created world of multifarious things and creatures, even as Prahlāda did. There was obviously no need, in that case, for him to send emissaries to the Lord, here and there, as he has been doing. And now, the Āzhvār clarifies his stand; he pines for the Lord’s extraordinary Form of exquisite charm, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீர் ஆய் நிலன் ஆய் நீராய் நிலனாய்; தீ ஆய் கால் ஆய் தீயாய் காற்றாய்; நெடு வான் ஆய் நீண்ட ஆகாசமாய்; சீரார் சிறந்த; சுடர்கள் இரண்டு ஆய் சந்திர சூர்யர்களாகவும்; சிவன் ஆய் சிவனாகவும்; அயன் ஆய் பிரமனாகவும் ஆனாய்; கூர் ஆர் ஆழி கூர்மையான சக்கரத்தையும்; வெண் சங்கு வெண்சங்கையும்; ஏந்தி கையில் ஏந்திக் கொண்டு; மண்ணும் மண்ணுலகும்; விண்ணும் விண்ணுலகும்; மகிழவே மகிழும்படி; கொடியேன் பால் கொடியேனான அடியேனிடத்தில்; ஒரு நாள் ஒரு நாளாவது; வாராய் வரவேண்டும்
nilan earth (which is an effect of water); āy having as body; thī fire (which is the cause for both water and earth, which is given great importance in chāndhŏgya upanishath); āy having as body; kāl air (which is the cause for fire); āy having as body; nedu very expansive; vān ether; with all these, the samashti (initial creation); āy create, enter inside and be the antharyāmi for them; sīrār being the primary person for vyashti srushti (variegated creation) (as said in “sūryā chandhramasau dhāthā yathāpūrvamakalpayath” (ṣun, moon etc get created as before by the lord); iraṇdu sudargal̤ moon and sun (benefactors due to providing heat and coolness); āy having as body; sivan rudhra; āy having as body; ayan brahmā; ānāy ŏh one who is having them as body by being their antharāthmā (indwelling soul)!; kūr sharpness (in eliminating the enemies); ār having; āzhi divine chakra (disc); veṇ having pure white complexion (which is enjoyable for the devotees); sangu ṣrī pānchajanyam (the divine conch); ĕndhi holding; maṇṇum leelā vibhūthi (material realm) which is highlighted by the earth; viṇṇum nithya vibhūthi which is highlighted by the term -parama vyŏma- (supreme sky); magizha to be delighted; kodiyĕnpāl for ī who am having cruelty (of forcing you to show your distinguished form); oru nāl̤ at least on one day; vārāy should arrive; maṇṇum earth; viṇṇum the higher worlds

TVM 6.9.2

3432 மண்ணும்விண்ணும்மகிழக் குறளாய்வலங்காட்டி *
மண்ணும்விண்ணும்கொண்ட மாயவம்மானே? *
நண்ணியுனைநான் கண்டுகந்துகூத்தாட *
நண்ணியொருநாள் ஞாலத்தூடேநடவாயே.
3432 மண்ணும் விண்ணும் மகிழக் * குறள் ஆய் வலம் காட்டி *
மண்ணும் விண்ணும் கொண்ட * மாய அம்மானே **
நண்ணி உனை நான் * கண்டு உகந்து கூத்தாட *
நண்ணி ஒருநாள் * ஞாலத்தூடே நடவாயே (2)
3432 maṇṇum viṇṇum makizhak * kuṟal̤ āy valam kāṭṭi *
maṇṇum viṇṇum kŏṇṭa * māya ammāṉe **
naṇṇi uṉai nāṉ * kaṇṭu ukantu kūttāṭa *
naṇṇi ŏrunāl̤ * ñālattūṭe naṭavāye (2)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, wondrous Lord, in Your captivating form as the midget Vāmana, You enjoyed the entire universe, taking all the worlds from Bali. Please come to this land for just one day, so I can dance under the enchantment of Your presence.

Explanatory Notes

Unto the Āzhvār who invited the Lord to come down here and exhibit His superb Form, the Lord would appear to have told that He would rather comply with the Āzhvār’s request after lifting him up to spiritual world, in due course. But the Āzhvār insists that He. who displayed His exquisite Form to Asuras like Mahā Bali, shouldn’t hesitate to respond to his (Āzhvār’s) devout call and regale him, right here.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண்ணும் மண்ணுலகத்தவரும்; விண்ணும் விண்ணுலகத்தவரும்; மகிழ மகிழும்படி; குறள் ஆய் வாமனனாய் வந்து; வலம் காட்டி உன் சக்தியைக் காட்டி; மண்ணும் மண்ணுலகத்தையும்; விண்ணும் விண்ணுலகத்தையும்; கொண்ட அளந்து கொண்ட; மாய அம்மானே! மாய அம்மானே!; நண்ணி உனை நான் உன்னை நான் அடைந்து; கண்டு உகந்து கண்டு மகிழ்ந்து; கூத்தாட பரவசமடைந்து கூத்தாட; நண்ணி ஒரு நாள் நீ தானே வந்து ஒரு நாள்; ஞாலத்தூடே இந்தப் பூமியிலே; நடவாயே நடை அழகைக் காட்ட வரவேண்டும்
magizha to the delight; kuṛal̤āy as vāmana (who shrunk his huge form); valam the omnipotency; kātti manifesting; maṇṇum earth; viṇṇum the higher worlds; koṇda measured; māyam having amaśing activity; ammānĕ ŏh lord!; unai you (who are having beauty which was manifested to those with ulterior motives); nān ī (who am having the extreme desire ); naṇṇi reaching (with that beauty); kaṇdu (not just through internal vision but ) physically seeing; ugandhu being pleased; kūththāda to dance; naṇṇi arrive here (just as you arrived at the sacrificial arena; oru nāl̤ one day; gyālaththūdĕ in the earth; nadavāy should walk; ugandhŏṛu every yuga; gyālaththūdĕ descending on earth

TVM 6.9.3

3433 ஞாலத்தூடேநடந்தும்நின்றும் கிடந்திருந்தும் *
சாலப்பலநாள் உகந்தோறுஉயிர்கள்காப்பானே! *
கோலத்திருமாமகளோடு உன்னைக்கூடாதே *
சாலப்பலநாள் அடியேன்இன்னம்தளர்வேனோ?
3433 ஞாலத்தூடே நடந்தும் நின்றும் * கிடந்து இருந்தும் *
சாலப் பல நாள் * உகம்தோறு உயிர்கள் காப்பானே **
கோலத் திரு மா மகளோடு * உன்னைக் கூடாதே *
சாலப் பல நாள் * அடியேன் இன்னம் தளர்வேனோ? (3)
3433 ñālattūṭe naṭantum niṉṟum * kiṭantu iruntum *
cālap pala nāl̤ * ukamtoṟu uyirkal̤ kāppāṉe **
kolat tiru mā makal̤oṭu * uṉṉaik kūṭāte *
cālap pala nāl̤ * aṭiyeṉ iṉṉam tal̤arveṉo? (3)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Lord, throughout the ages, you have graced the Earth with your incarnations, tirelessly aiding your devotees for countless years, assuming myriad forms. Yet, must I endure this separation from you and your divine consort any longer?

Explanatory Notes

The Āzhvār rightly questions the Lord who incarnated, in many ways and on many occasions, to succour His devotees, whether He cannot incarnate once more, for his sake. As, Śrī Rāma, the Lord walked through the depopulated forests where very few could enjoy His entrancing gait. And now, why should He not walk in front of the Āzhvār, yearning to behold His majestic gait, at least once in a way?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உகம்தோறு ஒவ்வொரு யுகத்திலும்; ஞாலத்தூடே பூலோகத்திலே; நடந்தும் நின்றும் நடந்தும் நின்றும்; கிடந்து இருந்தும் கிடந்தும் இருந்தும்; சாலப் பல நாள் பல்லாண்டு பலகாலம்; உயிர்கள் காப்பானே! உயிர்களைக் காப்பவனே!; கோலத் திருமா மகளோடு அழகிய திருமகளோடு; உன்னை சேர்ந்திருக்கும் உன்னை; கூடாதே அடைந்து அநுபவிக்காமல்; சாலப் பல நாள் இன்னம் இன்னும் எவ்வளவு நாட்கள்; அடியேன் அடியேன்; தளர்வேனோ? இழந்து துடிப்பேனோ?
nadandhum mercifully walked as said in -chachāra vasudhāthalĕ-; ninṛum stood (holding the bow with the arrow ready to be launched as said in -avashtabya cha thishtantham dhadharṣa dhanurūrjitham-); kidandhum mercifully rested (like an ocean in front of another ocean as said in -prathiṣiṣyĕ mahŏdhadhĕ:-); irundhum being nicely seated along with pirātti (as said in -ĕvam āsthĕ sa dharmāthmā sīthayā saharāghava:-); sālap pala nāl̤ for a long time (as said in -dhaṣa varsha sahasrāṇi dhaṣa varsha ṣathāni cha-); uyirgal̤ creatures; kāppānĕ ŏh one who protects!; kŏlam one who appears matching your beautiful form as said in -vishṇŏr dhĕhānurūpām vai karŏthyĕshā-thmanasthanūm-; thiru mā magal̤ŏdu with lakshmi; unnai you; kūdādhĕ without reaching and enjoying; sālap pala nāl̤ for the times to come; adiyĕn ī (who knows our [lord-servant] relationship); innum even after acquiring the taste [for bhagavath vishayam]; thal̤arvĕnŏ should ī suffer due to not acquiring the experience?; sakata asurar ṣakatāsura-s; udal body

TVM 6.9.4

3434 தளர்ந்தும்முறிந்தும் சகடவசுரருடல்வேறா *
பிளந்துவீயத் திருக்காலாண்டபெருமானே! *
கிளர்ந்துபிரமன்சிவன் இந்திரன்விண்ணவர்சூழ *
விளங்கவொருநாள் காணவாராய்விண்மீதே.
3434 தளர்ந்தும் முறிந்தும் * சகட அசுரர் உடல் வேறா *
பிளந்து வீயத் * திருக்கால் ஆண்ட பெருமானே **
கிளர்ந்து பிரமன் சிவன் * இந்திரன் விண்ணவர் சூழ *
விளங்க ஒருநாள் * காண வாராய் விண்மீதே (4)
3434 tal̤arntum muṟintum * cakaṭa acurar uṭal veṟā *
pil̤antu vīyat * tirukkāl āṇṭa pĕrumāṉe **
kil̤arntu piramaṉ civaṉ * intiraṉ viṇṇavar cūzha *
vil̤aṅka ŏrunāl̤ * kāṇa vārāy viṇmīte (4)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Lord, your powerful feet shattered the demon trapped in the cart-wheel. I implore you to manifest in the sky, even if just for a fleeting moment, alongside Brahma, Shiva, and other celestial beings, so that I may behold the splendor of your divine galaxy.

Explanatory Notes

The Lord’s feet afford protection not only to us all. His subjects, but to the Lord, as well. Baby Kṛṣṇa was fast asleep in the can, an improvised cradle, when a demon entered the cartwheel. The Babe cried for milk and the legs kicked violently against the wheel, shattering the demon to pieces. Therefore it is, the text in this song (original) contains a phrase (Tirukkālāṇṭa + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சகட அசுரர் சகடாசுரனுடைய; உடல் வேறா உடலானது; தளர்ந்தும் தளர்ந்தும்; முறிந்தும் முறிந்தும்; பிளந்து வீய பிளந்தும் அழியும்படி; திருக்கால் ஆண்ட திருவடிகளால் உதைத்து முடித்த; பெருமானே! பெருமானே!; பிரமன் சிவன் பிரமன் சிவன்; இந்திரன் இந்திரன் ஆகியோரும்; விண்ணவர் மற்றுமுள்ள தேவர்களும்; கிளர்ந்து உத்ஸாஹத்துடன் வந்து; சூழ சூழ்ந்து வணங்க; விளங்க அதனாலே ஒரு மேன்மை தோன்றும்படி; ஒரு நாள் காண ஒரு நாளாகிலும் நான் காண; விண்மீதே ஆகாசத்தில்; வாராய் வந்து தோன்ற வேண்டும்
thal̤arndhum losing firmness; muṛindhum splitting into two; vĕṛā to become different pieces; pil̤andhu broke; vīya to lose its form; thirukkāl divine foot; āṇda engaged; perumānĕ ŏh lord!; kil̤arndhu being active (with desire, giving up their ego of considering themselves as the lords); biraman brahmā; sivan rudhra; indhiran indhra; viṇṇavar dhĕvas; sūzha surround and worship; vil̤anga manifesting the splendour (of being their lord); oru nāl̤ one day; viṇ mīdhu on the sky; kāṇa to be seen; vārāy you should appear!; viṇ mīdhu in paramapadham (which is the ultimate manifestation of his supremacy); iruppāy residing there (superior to everyone)

TVM 6.9.5

3435 விண்மீதிருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடல்சேர்ப்பாய்! *
மண்மீதுழல்வாய்! இவற்றுளெங்கும்மறைந்துறைவாய்! *
எண்மீதியன்றபுறவண்டத்தாய்! எனதாவி *
உள்மீதாடி உருக்காட்டாதேஒளிப்பாயோ?
3435 விண்மீது இருப்பாய் மலைமேல் நிற்பாய் * கடல் சேர்ப்பாய் *
மண்மீது உழல்வாய் * இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் **
எண்மீது இயன்ற புற அண்டத்தாய் * எனது ஆவி *
உள் மீது ஆடி * உருக் காட்டாதே ஒளிப்பாயோ? (5)
3435 viṇmītu iruppāy malaimel niṟpāy * kaṭal cerppāy *
maṇmītu uzhalvāy * ivaṟṟul̤ ĕṅkum maṟaintu uṟaivāy **
ĕṇmītu iyaṉṟa puṟa aṇṭattāy * ĕṉatu āvi *
ul̤ mītu āṭi * uruk kāṭṭāte ŏl̤ippāyo? (5)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Lord, you dwell in the lofty SriVaikuntam, stand in your iconic form on Mount Tiruvēṅkaṭam, recline on the Milk-ocean, and roam on Earth in your incarnate forms. Yet you remain invisible inside all things and beings, pervading countless regions far beyond. Should you hide yourself after stimulating my mind?

Explanatory Notes

(i) The five different manifestations of the Lord, namely, ‘Para’, ‘Vyūha’, ‘Vibhava’, ‘Antaryāmi’ and ‘Arca’ are set out here. The ‘Vyūha’ denotes the Lord’s seat of creative activity, namely, the Milk-ocean; all the other aspects have been indicated in the verse itself, within brackets.

(ii) The Āzhvār longs for the external perception of the Lord inside, in His ‘Divya Maṅgala Vigraha’ (exclusive Form of exquisite charm).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண்மீது இருப்பாய்! பரமபதத்தில் வீற்றிருப்பவனே!; மலைமேல் நிற்பாய்! திருமலையில் நிற்கின்றவனே!; கடல்சேர்ப்பாய்! பாற்கடலிலே கண் வளர்ந்தருளுமவனே!; மண் மீது உழல்வாய்! பூமியின்மேல் அவதரிப்பவனே!; இவற்றுள் எங்கும் இவைகளுள் எங்கும் எல்லாவற்றிலும்; மறைந்து உறைவாய் மறைந்து உறைபவனே!; எண் மீது இயன்ற கணக்கற்ற; புற அண்டத்தாய்! அண்டங்களுக்குக் காவலனானவனே!; எனது ஆவி உள் என்னுடைய நெஞ்சுக்குள்ளே; மீது ஆடி நடையாடி விட்டு; உருக் காட்டாதே கண்களுக்கு இலக்கு ஆகாமல்; ஒளிப்பாயோ? ஒளிர்வது தகுந்ததுதானோ?
malai mĕl in thirumalā (which is the ultimate manifestation of his simplicity); niṛpāy standing there (in archā (deity) form); kadal in thiruppāṛkadal (kshīrābdhi #milky ocean); sĕrppāy reclining mercifully (assuming the anirudhdha form); maṇ mīdhu incarnating on earth; uzhalvāy roaming around (along with the mortals there); ivaṝul̤ in this universe; engum in all objects; maṛaindhu being invisible to the senses (being the antharāthmā (in-dwelling super-soul)); uṛaivāy residing; eṇ count; mīdhu beyond; iyanṛa to go; puṛam other; aṇdaththāy you who are present in oval shaped universes; enadhu my; āvi ul̤ in the heart (which is the abode for prāṇa (vital air)); mīdhādi after being fully present; uru form; kāttādhĕ not making visible for my eyes; ol̤ippāyŏ why are you hiding [from me]?; ŏr one; adi divine foot

TVM 6.9.6

3436 பாயோரடிவைத்து அதன்கீழ்ப் பரவைநிலமெல்லாம்
தாய் * ஓரடியால் எல்லாவுலகும்தடவந்த
மாயோன்! * உன்னைக்காண்பான் வருந்தியெனைநாளும் *
தீயோடுடன்சேர்மெழுகாய் உலகில்திரிவேனோ?
3436 பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ்ப் * பரவை நிலம் எல்லாம்
தாய் * ஓர் அடியால் * எல்லா உலகும் தடவந்த
மாயோன் ** உன்னைக் காண்பான் * வருந்தி எனைநாளும் *
தீயோடு உடன்சேர் மெழுகாய் * உலகில் திரிவேனோ? (6)
3436 pāy or aṭi vaittu ataṉ kīzhp * paravai nilam ĕllām
tāy * or aṭiyāl * ĕllā ulakum taṭavanta
māyoṉ ** uṉṉaik kāṇpāṉ * varunti ĕṉaināl̤um *
tīyoṭu uṭaṉcer mĕzhukāy * ulakil tiriveṉo? (6)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My wondrous Lord, with just one step, you encompassed the entire land surrounded by oceans, and with another, you pervaded all the regions above. In vain do I wait to behold you. How much longer must I suffer in this world before we come face to face, like wax melting close to fire?

Explanatory Notes

There was a time when the Lord was after the Āzhvār, trying to reclaim the errant soul, straying away from Him and eluding His grasp. But now, it is the other way round; the Āzhvār is madly after the Lord. Who is eluding him. The Āzhvār’s plight is like that of the wax close to fire, as distinguished from wax actually placed on fire, neither dead nor alive, in the true sense.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓர் அடி ஒரு திருவடியை; பாய் வைத்து பரப்பிவைத்து; பரவை நிலம் எல்லாம் கடல் சூழ்ந்த ஸகல பூமியுயைம்; அதன் கீழ் அந்தத் திருவடியின் கீழே; தாய் தாவி அளந்து; ஓர் அடியால் மற்றொரு திருவடியால்; எல்லா உலகும் மேலுலக மெல்லாவற்றையும்; தடவந்த ஆக்ரமித்த; மாயோன் மாயோனே!; உன்னைக்காண்பான் உன்னைக் காண; வருந்தி முயற்சித்து; தீயோடு உடன் நெருப்போடு; சேர் மெழுகாய் சேர்ந்த மெழுகென; உலகில் இந்த உலகத்தில்; எனைநாளும் எத்தனைநாள் தான்; திரிவேனோ? திரிய வேண்டுமோ?
pāy spread; vaiththu kept; adhan kīzh to be underneath it; paravai with the ocean; nilam ellām the whole earth; thāy measured; ŏr with the other; adiyāl divine foot; ulagu higher world; ellām all; thada vandha touched; māyŏn amaśing lord!; unnai you; kāṇbān to see; enai nāl̤um at all times; varundhi grieved; thīyŏdu with fire; udan near; sĕr present together; mezhugāy like wax; ulagil in this world; thirivĕnŏ will grieve?; ulagil in the world; thiriyum engaged

TVM 6.9.7

3437 உலகில்திரியுங்கருமகதியாய் உலகமாய் *
உலகுக்கேயோருயிருமானாய்! புறவண்டத்து *
அலகில்பொலிந்த திசைபத்தாயஅருவேயோ *
அலகில்பொலிந்த அறிவிலேனுக்கருளாயே.
3437 உலகில் திரியும் கரும கதி ஆய் * உலகம் ஆய் *
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் * புற அண்டத்து **
அலகில் பொலிந்த * திசை பத்து ஆய அருவேயோ *
அலகில் பொலிந்த * அறிவிலேனுக்கு அருளாயே (7)
3437 ulakil tiriyum karuma kati āy * ulakam āy *
ulakukke or uyirum āṉāy * puṟa aṇṭattu **
alakil pŏlinta * ticai pattu āya aruveyo *
alakil pŏlinta * aṟivileṉukku arul̤āye (7)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord, You are the Super-Soul of both the seen and unseen, overseeing all actions and their performers in countless worlds. Even in distant realms, Your grace extends to souls released from worldly bonds, their wisdom spanning ten directions. Please bestow Your sweet grace upon me, despite my countless failings.

Explanatory Notes

The sentient beings (intelligent souls, embodied) and the non-sentient matter, which constitute the worlds, form the body of God and they are inseparably related to Him, as attributes are to a substance, body to the soul.

Whosoever performs acts as the means for securing certain objectives, owes the very performance of those acts to the Lord who endowed them with body + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகில் திரியும் உலகத்தில் சஞ்சரிக்கும்; கரும கர்மங்களின் உபாயங்களுக்கு; கதி ஆய் சாதனமாய் உள்ளாய்; உலகம் ஆய் உலகமாயும்; உலகுக்கே உலகங்களில் உள்ளவைகளுக்கு; ஓர் ஒப்பற்ற; உயிரும் ஆனாய் ஆத்மாவாகவும்; புற அண்டத்து அண்டத்துக்கு வெளியே; திசை பத்து ஆய பத்து திசையிலுமுள்ள; அலகில் பொலிந்த எண்ணிலடங்காது விளங்கும்; அருவேயோ முக்தர்களுக்கும் ஆத்மாவாக இருப்பவனே!; அலகில் பொலிந்த கணக்கற்ற; அறிவிலேனுக்கு அஞ்ஞானத்தை உடைய அடியேனுக்கு; அருளாயே அருள் புரிய வேண்டும்
karumam leading to result; gathi for the means; āy being the controller; ulagam for the doers of those means; āy being the promoter (by being the antharāthmā); ulagukku for all the worlds; ŏr uyirum being the singular soul; ānāy being the one; puṛa aṇdaththu those who remain outside the oval shaped universe; alagil polindha with countless (endless) nature; paththu ten; thisai in directions; āya pervaded; aruvĕ ŏh one who is having the mukthāthmās (liberated souls) as prakāram (form)!; alagil polindha countless [endless]; aṛivilĕnukku me who is not having the means to attain you, due to my ignorance; arul̤āy should shower your mercy (to have you as the means and end).; aṛivār for the distinguished wise persons; uyir dhāraka (sustainer)

TVM 6.9.8

3438 அறிவிலேனுக்கருளாய் அறிவாருயிரானாய் *
வெறிகொள்சோதிமூர்த்தி! அடியேன்நெடுமாலே! *
கிறிசெய்தென்னைப்புறத்திட்டு இன்னம்கெடுப்பாயோ? *
பிறிதொன்றறியாஅடியேன் ஆவிதிகைக்கவே.
3438 அறிவிலேனுக்கு அருளாய் * அறிவார் உயிர் ஆனாய் *
வெறி கொள் சோதி மூர்த்தி * அடியேன் நெடுமாலே **
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு * இன்னம் கெடுப்பாயோ *
பிறிது ஒன்று அறியா அடியேன் * ஆவி திகைக்கவே? (8)
3438 aṟivileṉukku arul̤āy * aṟivār uyir āṉāy *
vĕṟi kŏl̤ coti mūrtti * aṭiyeṉ nĕṭumāle **
kiṟicĕytu ĕṉṉaip puṟattiṭṭu * iṉṉam kĕṭuppāyo *
piṟitu ŏṉṟu aṟiyā aṭiyeṉ * āvi tikaikkave? (8)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Lord, within the wise, Your divine essence resides. Your radiant form emanates fragrant grace, showering upon me boundless love despite my ignorance. I seek refuge solely in You; please do not lead me astray with any mischief, but rather bestow Your guidance upon me.

Explanatory Notes

In the preceding song, the Āzhvār invoked the Lord’s grace and yet, the Lord did not condescend to come unto him. The Āzhvār grows sceptical about the Lord’s intentions whether He still tries to confound him and unsettle his firm conviction that the Lord’s lovely feet constitute his sole Refuge, making him slip back to his old ways.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அறிவார் ஞானிகளின்; உயிர் ஆனாய் உயிராய் இருப்பவனே!; வெறி கொள் மணமும் அழகும் உள்ள; சோதி மூர்த்தி! ஒளி மூர்த்தியே!; அடியேன் அடியேனை ஆட்கொண்ட; நெடுமாலே! நெடுமாலே!; அறிவிலேனுக்கு அறிவில்லாத அடியேனுக்கு; அருளாய் அருள் புரிய வேண்டும்; பிறிது ஒன்று அறியா வேறொரு புகலறியாத; அடியேன் அடியேனுடைய; ஆவி திகைக்கவே நெஞ்சு கலங்கும்படியாக; கிறி செய்து ஏதாவது உபாயம் செய்து; என்னைப் புறத்திட்டு என்னை புறத்தே தள்ளி; இன்னம் மேலும்; கெடுப்பாயோ? கெடுத்து விட நினைக்கிறாயோ?
ānāy you are;; veṛikol̤ totally fragrant; sŏdhi radiant; mūrththi having divine form; adiyĕn you who made me totally exist for you to desire for you; nedumālĕ ŏh one who is having great attachment!; aṛivilĕnukku for me who does not know the means (to enjoy such beautiful form); arul̤āy you should let me enjoy it by your mercy;; piṛidhu other than you; onṛu any other goal; aṛiyā without knowing; adiyĕn me (who is having the nature to be at your disposal); āvi heart; thigaikka to become worried; kiṛi by some means; seydhu having planted the taste; ennai me (who knows the greatness of your beautiful form); puṛaththu worldly matters; ittu engage; innam even today (when ī have the desire for you); keduppāyŏ are you planning to torment me?; āvi heart; thigaikka to tremble

TVM 6.9.9

3439 ஆவிதிகைக்க ஐவர்குமைக்கும்சிற்றின்பம் *
பாவியேனைப் பலநீகாட்டிப்படுப்பாயோ *
தாவிவையங்கொண்ட தடந்தாமரைகட்கே *
கூவிக்கொள்ளும்காலம் இன்னங்குறுகாதோ?
3439 ஆவி திகைக்க * ஐவர் குமைக்கும் சிற்றின்பம் *
பாவியேனைப் * பல நீ காட்டிப் படுப்பாயோ? **
தாவி வையம் கொண்ட * தடம் தாமரை கட்கே *
கூவிக் கொள்ளும் காலம் * இன்னம் குறுகாதோ? (9)
3439 āvi tikaikka * aivar kumaikkum ciṟṟiṉpam *
pāviyeṉaip * pala nī kāṭṭip paṭuppāyo? **
tāvi vaiyam kŏṇṭa * taṭam tāmarai kaṭke *
kūvik kŏl̤l̤um kālam * iṉṉam kuṟukāto? (9)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord, will You eliminate the gap and unite me with Your divine feet, which traverse the realms? Or do You plan to forsake me and lead my mind astray, leaving me ensnared by worldly desires?

Explanatory Notes

(i) The Āzhvār prays unto the Lord that He need no longer persevere in the dangerous experiment of keeping him in this land of nescience, where the senses have free play. Nampiḷḷai, in his unique diction, would put it, as a preamble to this song, the Āzhvār telling the Lord, “You ask me what mischief You have pḷayed unto me; let me tell You that Your exposing me to the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆவி திகைக்க மனம் கலங்கும்படியாக; ஐவர் ஐந்து இந்திரியங்களும்; குமைக்கும் வருத்தும்படியாக; சிற்றின்பம் பலவகையான சிற்றின்பம்; பல நீ காட்டி பலவற்றைக்காட்டி; பாவியேனை பாவியான என்னை; படுப்பாயோ? நீ அழிக்க நினைக்கிறாயோ?; தாவி வையம் உலகத்தைத் தாவி; கொண்ட அளந்து கொண்ட; தடம் தாமரைகட்கே பெரிய திருவடித் தாமரைகளில்; கூவிக் கொள்ளும் அடியேனை அழைத்துக்கொள்ளும்; காலம் இன்னம் காலம் இன்னும்; குறுகாதோ? குறுகாதோ?
aivar the five senses; kumaikkum torturing saying -give me more-; siṛu insignificant; inbam sweet pleasures; pala in many varieties; kātti revealing; you (who have the ability to destroy these); pāviyĕnai me who is a sinner (to be residing in this sorrowful place while being qualified to be joyful endlessly); paduppāyŏ are you planning to finish me?; vaiyam earth; thāvi measured to claim full ownership; koṇda accepted; thadam infinitely enjoyable; thāmaraigatku to engage in the divine lotus feet; kūvik kol̤l̤um to invite me; kālam the time; innam even at this stage (when ī have realised that even the sight of worldly pleasures is the cause to disaster); kuṛugādhŏ Will it not happen soon?; kuṛugā nīl̤ā without expansion or contraction in true nature; iṛudhi kūdā without an end

TVM 6.9.10

3440 குறுகாநீளா இறுதிகூடாஎனையூழி *
சிறுகாபெருகா அளவிலின்பம்சேர்ந்தாலும் *
மறுகாலின்றிமாயோன் உனக்கேயாளாகும் *
சிறுகாலத்தையுறுமோ? அந்தோ! தெரியிலே.
3440 குறுகா நீளா * இறுதிகூடா எனை ஊழி *
சிறுகா பெருகா * அளவு இல் இன்பம் சேர்ந்தாலும் **
மறு கால் இன்றி மாயோன் * உனக்கே ஆளாகும் *
சிறு காலத்தை உறுமோ * அந்தோ தெரியிலே? (10)
3440 kuṟukā nīl̤ā * iṟutikūṭā ĕṉai ūzhi *
ciṟukā pĕrukā * al̤avu il iṉpam cerntālum **
maṟu kāl iṉṟi māyoṉ * uṉakke āl̤ākum *
ciṟu kālattai uṟumo * anto tĕriyile? (10)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, wondrous Lord, the purported bliss in a state free from the body upon ultimate liberation is undoubtedly eternal and unchanging. However, can it ever compare to the joy of serving at your feet, even if just once and for a brief moment?

Explanatory Notes

Reference to the petty pleasures, prompted by the five senses, was made by the Āzhvār in the last song. This would appear to have raised a doubt in the Lord’s mind whether or not the Āzhvār eschewed the ‘Kaivalya Mokṣa’, which was everlasting, undergoing no modification, at any time. The Āzhvār, therefore, hastens to clarify his stand in this regard, as well. The so-called + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாயோன் மாயோனே!; குறுகா குறுகுவதும் இல்லாததும்; நீளா பெருகுவதும் இல்லாததும்; இறுதி கூடா முடிவு இல்லாததும்; எனை ஊழி எத்தனை கற்பங்கள் சென்றாலும்; சிறுகா காலவேறுபாட்டினால் குறைவதும்; பெருகா பெருகுவதும் இல்லாததும்; அளவு இல் இன்பம் அளவில்லாத சிற்றின்பம்; சேர்ந்தாலும் சேர்ந்தாலும் (கைவல்யம் ); தெரியிலே ஆராய்ந்து பார்த்தால்; மறுகால் இன்றி அற்ப காலமானாலும்; உனக்கே உனக்கே கைங்கர்யம்; ஆளாகும் செய்யும் அடிமைப் பேறான; சிறு காலத்தை சிறிய காலமே கொள்ளத் தக்கது; உறுமோ ஆத்மாநுபவமான கைவல்யம்; அந்தோ! தள்ளத் தக்கது அந்தோ!
enai ūzhi at all times; siṛugā perugā without decay and growth; al̤avil without any limit; inbam bliss of self; sĕrndhālum even if attained; māyŏn ŏh the amaśing one whose momentary experience is greatly distinguished!; theriyil if analysed; maṛugāl repeat; inṛi not having; unakkĕ for you only; āl̤ āgum being a servitor and enjoying that servitude; siṛu kālaththai that small fraction of time; andhŏ alas!; uṛumŏ is it a match?; theridhal having clarity (through hearing); ninaidhal thinking (firmly through contemplation)

TVM 6.9.11

3441 தெரிதல்நினைதல் எண்ணலாகாத்திருமாலுக்கு *
உரியதொண்டர்தொண்டர் தொண்டன்சடகோபன் *
தெரியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் *
உரியதொண்டராக்கும் உலகமுண்டாற்கே. (2)
3441 ## தெரிதல் நினைதல் * எண்ணல் ஆகாத் திருமாலுக்கு *
உரிய தொண்டர் தொண்டர் * தொண்டன் சடகோபன் **
தெரியச் சொன்ன * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
உரிய தொண்டர் ஆக்கும் * உலகம் உண்டாற்கே (11)
3441 ## tĕrital niṉaital * ĕṇṇal ākāt tirumālukku *
uriya tŏṇṭar tŏṇṭar * tŏṇṭaṉ caṭakopaṉ **
tĕriyac cŏṉṉa * or āyirattul̤ ip pattum *
uriya tŏṇṭar ākkum * ulakam uṇṭāṟke (11)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Those who learn these ten songs out of the profound thousand, composed by Caṭakōpaṉ, the humble servant of the eternal Servants of Tirumāl, will become exclusive servants of the Lord Supreme, Whose magnificence transcends mere learning, contemplation, or meditation, He who consumed all the worlds.

Explanatory Notes

The Lord is, no doubt, to be realised through learning, contem plation and meditation but all these, by themselves, will be of no avail, unless accompanied by deep love for Him. The Āzhvār plunges himself down to the bottom-most depth of service, like unto the extremely thirsty diving into the deep pocket of water in the river bed. This is the only way by which he could + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெரிதல் தெளிந்து (ஸ்ரவணம் ); நினைதல் ஆராய்ந்து நினைத்து (மனனம் ); எண்ணல் தியானத்தாலும் (நிதித்யாஸனம்); ஆகா அறிய முடியாத; திருமாலுக்கு திருமாலுக்கு; உரிய தொண்டர் உரிய தொண்டரானவருக்கு; தொண்டர் தொண்டு பூண்ட; தொண்டன் தொண்டனான; சடகோபன் நம்மாழ்வார்; தெரிய தெளியும்படியாக; சொன்ன அருளிச்செய்த; ஓர் ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும் ஓதுபவர்; உலகம் உலகம்; உண்டாற்கே உண்ட பெருமானின்; உரிய தொண்டர் உரிய தொண்டருக்கு; ஆக்கும் தொண்டர் ஆவர்
eṇṇal even if fixed in mind (through repeated meditation); āgā without any limit; thirumālukku for emperumān who is the consort of ṣrī mahālakshmi; uriya thoṇdar for those who became exclusive servitors; thoṇdar for those who are servitors; thoṇdan servitor; satakŏpan nammāzhvār; theriya in detail; sonna mercifully spoke; ŏr āyiraththul̤ ippaththum this decad among the thousand pāsurams; ulagam uṇdāṛku one who protected everything; uriya thoṇdar exclusive servitor; ākkum will make.; ulagam the world; uṇda while consuming