சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானைச் செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே —7-6-1-பிரவேசம் –
போன புனிதர் -என்று இன்னாதானார் –நாம் எங்கேனும் போனோமோ – உமக்காகா வன்றோ இவ்வவோ இடங்களில் வந்து நிற்கிறது