PT 7.6.5

கண்ணனைக் கண்டுகொண்ட இடம் இது

1602 கஞ்சனைக்காய்ந்தானைக் கண்ணமங்கையுள்நின்றானை *
வஞ்சனப்பேய்முலையூடு உயிர்வாய்மடுத்துண்டானை *
செஞ்சொல்நான்மறையோர் தென்னழுந்தையில்மன்னிநின்ற *
அஞ்சனக்குன்றந்தன்னை அடியேன்கண்டு கொண்டேனே.
1602 kañcaṉaik kāyntāṉaik * kaṇṇamaṅkaiyul̤ niṉṟāṉai *
vañcaṉap pey mulaiyūṭu * uyir vāy maṭuttu uṇṭāṉai **
cĕñcŏl nāṉmaṟaiyor * tĕṉ azhuntaiyil maṉṉi niṉṟa *
añcaṉak kuṉṟam-taṉṉai- * aṭiyeṉ kaṇṭukŏṇṭeṉe-5

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1602. Our lord of Thirumangai, the everlasting dark hill, who grew angry with Kamsan and killed him, and drank milk from the breasts of Putanā when she came as a mother to cheat him and killed her stays in Thiruvazhundur where Vediyars recite all the four Vedās. I, his devotee, saw him and am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கஞ்சனைக் கம்சனை; காய்ந்தானை அழித்தவனை; கண்ணமங்கையுள் திருக்கண்ணமங்கையில்; நின்றானை நின்றவனை; வஞ்சனப் பேய் வஞ்சகப்பேயான பூதனையின்; முலை ஊடு பாலையும்; உயிர் வாய் மடுத்து வாய்வழியே அவள் உயிரையும்; உண்டானை உண்டவனை; செஞ் சொல் அழகிய செஞ்சொற்களையுடைய; நான் நான்கு வேதங்களையும் அறிந்த; மறையோர் வைதிகர்கள் வாழும்; தென் அழுந்தையில் அழகிய திருவழுந்தூரில்; மன்னி நின்ற இருப்பவனை; அஞ்சனக் மை வண்ண; குன்றம் தன்னை மலை போன்றவனை; அடியேன் நான்; கண்டு கொண்டேனே கண்டு கொண்டேனே