PT 7.6.1

நரசிங்கனை நான் கண்ட இடம் திருவழுந்தூர்

1598 சிங்கமதாய்அவுணன் திறலாகம்முன்கீண்டுகந்த *
சங்கமிடத்தானைத் தழலாழிவலத்தானை *
செங்கமலத்தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற *
அங்கமலக்கண்ணனை அடியேன்கண்டுகொண்டேனே. (2)
1598 ## ciṅkam-atu āy avuṇaṉ * tiṟal ākam muṉ kīṇṭu ukanta *
caṅkam iṭattāṉait * tazhal āzhi valattāṉai **
cĕṅ kamalattu ayaṉ aṉaiyār * tĕṉ azhuntaiyil maṉṉi niṉṟa *
am kamalak kaṇṇaṉai- * aṭiyeṉ kaṇṭukŏṇṭeṉe-1

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1598. The lord who took the form of a man-lion and split open the chest of the Asuran Hiranyan, carrying a conch in his left hand and a fire-like discus in his right, stays in southern Thiruvazhundai (Thiruvazhundur) where the Vediyars are divine like Nānmuhan on a lovely red lotus. I, his devotee, saw beautiful lotus eyed- Kannan there and worshipped him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிங்கம் அது ஆய் நரசிம்மமாய்; அவுணன் இரணியனின்; திறல் ஆகம் பலத்த சரீரத்தை; முன் கீண்டு முன்பு கிழித்துப் போட்டு; உகந்த உகந்தவனும்; சங்கம் இடத்தானை சங்கை இடது கையிலும்; தழல் ஒளிமயமான; ஆழி சக்கரத்தை; வலத்தானை வலது கையிலுமுடையவனுமான; செங்கமலத்து அழகிய கமலத்தில் பிறந்த; அயன் பிரம்மனை ஒத்த; அனையார் வைதிகர்கள் வாழும்; தென் அழுந்தையில் அழகிய திருவழுந்தூரில்; மன்னி நின்ற இருக்கும்; அம் அழகிய; கமலக்கண்ணனை கமலக்கண்ணனை!; அடியேன் நான்; கண்கொண்டேனே கண்டுகொண்டேன்!