PT 7.6.2

பரசுராமனை நான் கண்டு திளைத்த இடம் இது

1599 கோவானார்மடியக் கொலையார்மழுக்கொண்டருளும் *
மூவாவானவனை முழுநீர்வண்ணனை * அடியார்க்கு
ஆ! ஆ! என்றிரங்கித் தென்னழுந்தையில்மன்னிநின்ற *
தேவாதிதேவனை யான்கண்டுகொண்டுதிளைத்தேனே.
1599 ko āṉār maṭiyak * kŏlai ār mazhuk kŏṇṭarul̤um *
mūvā vāṉavaṉai * muzhu nīr vaṇṇaṉai aṭiyārkku **
āā ĕṉṟu iraṅkit * tĕṉ azhuntaiyil maṉṉi niṉṟa *
tevātitevaṉai- * yāṉ kaṇṭukŏṇṭu til̤aitteṉe-2

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1599. The ocean-colored lord, the everlasting god of gods who fought and killed kings with his mazhu weapon and feels compassion for his devotees, stays in Thiruvazhundai (Thiruvazhundur). I saw him and I felt joy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோ ஆனார் அரசர்கள் அனைவரும்; மடிய மடிய; கொலை கொலை செய்வதை; ஆர் ஸ்வபாவமாக உடைய; மழுக்கொண்டு கோடாலியை; அருளும் கையிலுடையவனாய்; மூவா கிழத்தனம் போன்ற விகாரங்கள்; வானவனை இல்லாதவனாய்; முழு நீர் நிறைந்த கடல் நீர்; வண்ணனை நிறத்தை உடையவனாய்; அடியார்க்கு பக்தர்களுக்கு; ஆ ஆ! என்று ஆவா என்று; இரங்கி இரங்கி அருள்புரிபவனாய்; தென் அழுந்தையில் அழகிய திருவழுந்தூரில்; மன்னி நின்ற இருக்கும்; தேவாதி தேவனை நித்யஸூரிகளின் தலைவனை; யான் கண்டு நான் கண்டு; கொண்டு கொண்டு வணங்கி; திளைத்தேனே மகிழ்ந்தேன்