PT 7.6.7

அழுந்தூரில் ஆமருவியப்பனைக் கண்டு களித்தேன்

1604 திருவாழ்மார்வன்தன்னைத் திசைமண்நீர்எரிமுதலா *
உருவாய்நின்றவனை ஒலிசேரும்மாருதத்தை *
அருவாய்நின்றவனைத் தென்னழுந்தையில்மன்னிநின்ற *
கருவார்கற்பகத்தைக் கண்டுகொண்டுகளித்தேனே.
1604 tiru vāzh mārvaṉ-taṉṉait * ticai maṇ nīr ĕri mutalā *
uru āy niṉṟavaṉai * ŏli cerum mārutattai **
aru āy niṉṟavaṉait * tĕṉ azhuntaiyil maṉṉi niṉṟa *
karu ār kaṟpakattaik * kaṇṭukŏṇṭu kal̤itteṉe-7

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1604. The formless lord who is all the directions, the earth, oceans, fire, wind and sound, the Karpaga tree that takes away people’s birth, stays in southern Azhundai (Thiruvazhundur) embracing Lakshmi on his chest. I saw him there and I am happy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரு வாழ் திருமகள் வாழும்; மார்வன்தன்னை மார்பையுடையவனை; திசை மண் நீர் எரி திசை மண் நீர் நெருப்பு; முதலா முதலானவற்றிற்கு காரணபூதனை; உருவாய் இந்த பஞ்சபூதங்களின்; நின்றவனை சரீரமாக உடையவனை; ஒலி சேரும் சப்த ஸ்பர்ச குணத்தோடு கூடிய காற்று; மாருதத்தை ஆகியவற்றிற்கும் பஞ்பூதங்களுக்கும்; அருவாய் ஸூக்ஷ்மமாக அந்தராத்மாவாக; நின்றவனை உடையவனை; தென் அழுந்தையில் அழகியதிருவழுந்தூரில்; மன்னி நின்ற இருக்கும்; கருவார் வேர்ப் பற்று உடைய; கற்பகத்தை கற்பகவ்ருக்ஷத்தைப் போன்றவனானவனை; கண்டு கொண்டு கண்டு கொண்டு; களித்தேனே களித்தேனே