PT 7.6.4

குன்றினால் மழை தடுத்தவனை நான் கண்ட இடம் இது

1601 குன்றால்மாரிதடுத்தவனைக் குலவேழம்அன்று
பொன்றாமை * அதனுக்குஅருள்செய்த போரேற்றை *
அன்றுஆவின்நறுநெய்யமர்ந்துண்ண அணியழுந்தூர்
நின்றானை * அடியேன் கண்டுகொண்டுநிறைந்தேனே.
1601 kuṉṟāl māri taṭuttavaṉai * kula vezham aṉṟu
pŏṉṟāmai * ataṉukku arul̤cĕyta por eṟṟai **
aṉṟu āviṉ naṟu nĕy * amarntu uṇṭa aṇi azhuntūr
niṉṟāṉai- * aṭiyeṉ kaṇṭukŏṇṭu niṟainteṉe-4

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1601. The lord who carried Govardhanā mountain, stopping the storm and saving the cows and the cowherds, saved Gajendra from the crocodile and gave him his grace, and stole fragrant ghee made from cow’s milk and ate it stays in beautiful Thiruvazhundur. I, his devotee. saw him and was happy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்றால் மாரி மலையால்; தடுத்தவனை மழையை தடுத்தவனை; அன்று குல அன்று நல்ல குலத்தில்; வேழம் தோன்றிய கஜேந்திர யானை; பொன்றாமை அழிந்து போகாதவாறு; அதனுக்கு அதனுக்கு; அருள் செய்த அருள் செய்தவனும்; அன்று ஆவின் அன்று பசுவின்; நறுநெய் நறுநெய்யை; அமர்ந்து உண்ட மனம் பொருந்தி உகந்து உண்டவனும்; போர் ஏற்றை போரில் வல்லவனுமாக; நின்றானை இருப்பவனை; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; அடியேன் கண்டு அடியேன் கண்டு; கொண்டு கொண்டு வணங்கி; நிறைந்தேனே நிறைவு பெற்றேன்