PT 7.6.8

நிலமகள் கணவனை அழுந்தூரில் கண்டு களித்தேன்

1605 நிலையாளாக என்னையுகந்தானை * நிலமகள்தன்
முலையாள்வித்தகனை முதுநான்மறைவீதிதொறும் *
அலையாரும்கடல்போல்முழங்கும்தென்னழுந்தையில் மன்னிநின்ற *
கலையார்சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே.
1605 nilai āl̤ āka * ĕṉṉai ukantāṉai * nila makal̤-taṉ
mulai āl̤ vittakaṉai * mutu nāṉmaṟai vītitŏṟum **
alai ār kaṭalpol muzhaṅkum * tĕṉ azhuntaiyil maṉṉiniṉṟa *
kalai ār cŏṟpŏrul̤aik * kaṇṭukŏṇṭu kal̤itteṉe-8

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1605. He, the clever one, the meaning of words, who embraces the breasts of the earth goddess stays in Thennazundai (Thiruvazhundur) where on every street the reciting of the four ancient Vedās is like the roaring sound of the oceans, rolling with waves. He always makes me happy and I saw him in Thiruvazhundai. .

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னை என்னை; நிலை நிலையான கைங்கர்யம்; ஆள் ஆக பண்ணுபவனாக ஆக்கி; உகந்தானை உகந்தானை; நில மகள் தன் பூமாதேவியை; முலையாள் அனுபவித்த; வித்தகனை வித்தகனை; முது அநாதியான; நான்மறை நான்கு வேதன்களையும்; வீதிதொறும் வீதிதோறும்; அலையார் அலைகள் நிறைந்த; கடல் போல் கடல் போல்; முழங்கும் முழங்கும்; தென்அழுந்தையில் அழகிய திருவழுந்தூரில்; மன்னிநின்ற இருப்பவனை; கலையார் சாஸ்திரங்களின்; சொற்பொருளை பொருளாக இருப்பவனை; கண்டு கொண்டு கண்டு கொண்டு; களித்தேனே களித்தேனே