PT 7.6.9

திருமகள் கணவனை நான் கண்டு களித்த இடம் இது

1606 பேரானைக் குடந்தைப்பெருமானை * இலங்குஒளிசேர்
வாரார்வனமுலையாள் மலர்மங்கைநாயகனை *
ஆராவின்னமுதைத் தென்னழுந்தையில்மன்னிநின்ற *
காரார்கருமுகிலைக் கண்டுகொண்டுகளித்தேனே. (2)
1606 ## perāṉaik * kuṭantaip pĕrumāṉai * ilaṅku ŏl̤i cer
vār ār vaṉamulaiyāl̤ * malar-maṅkai nāyakaṉai **
ārā iṉ amutait * tĕṉ azhuntaiyil maṉṉi niṉṟa *
kār ār karu mukilaik- * kaṇṭukŏṇṭu kal̤itteṉe-9

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1606. The famous dark cloud-colored lord of Thirupper (Koiladi), Kudandai, the nectar that never loses its taste, the beloved of shining Lakshmi whose beautiful breasts are circled with a band, stays in everlasting Thennazhundai (Thiruvazhundur). I saw him and I am happy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேரானைக் திருப்பேர் நகரிலிருப்பவனை; குடந்தை குடந்தை; பெருமானை பெருமானை; இலங்கு ஒளி சேர் ஒளி வீசும்; வாஆர் கச்சோடு கூடின; வன முலையாள் மார்பையுடைய; மலர்மங்கை தாமரையில் தோன்றியவளின்; நாயகனை நாயகனை; ஆரா எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி ஏற்படாத; இன் அமுதை இனிய அமுதம் போன்றவனை; தென் அழுந்தையில் அழகிய திருவழுந்தூரில்; மன்னி நின்ற இருப்பவனை; கார் ஆர் மழைகாலத்து; கருமுகிலை இருண்ட மேகம் போன்றவனை; கண்டு கொண்டு கண்டு கொண்டு; களித்தேனே களித்தேனே