PT 7.6.10

தேவர் உலகை ஆள்வர்

1607 திறல்முருகனனையார் தென்னழுந்தையில்மன்னிநின்ற *
அறமுதல்வனவனை அணியாலியர்கோன் * மருவார்
கறைநெடுவேல்வலவன் கலிகன்றிசொல்ஐயிரண்டும் *
முறைவழுவாமைவல்லார் முழுதுஆள்வர்வானுலகே. (2)
1607 ## tiṟal murukaṉ aṉaiyār * tĕṉ azhuntaiyil maṉṉi niṉṟa *
aṟa mutalvaṉ-avaṉai * aṇi āliyar-koṉ maruvār **
kaṟai nĕṭu vel valavaṉ * kalikaṉṟi cŏl ai iraṇṭum *
muṟai vazhuvāmai vallār * muzhutu āl̤var-vāṉ-ulake-10

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1607. Kaliyan, the poet, the king of beautiful Thirumangai with a long spear, composed ten Tamil pāsurams on the god of dharma who stays in Thennazundai (Thiruvazhundur) where heroic people, strong as Murugan, live. If devotees learn and recite these ten pāsurams without mistake, they will go to the world of the sky and rule there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திறல் முருகன் பலத்தில் முருகனை; அனையார் ஒத்தவர்களிருக்கும்; தென் அழுந்தையில் அழகிய திருவழுந்தூரில்; மன்னி நின்ற இருக்கும் பெருமானை; அற முதல்வன் எல்லா தர்மங்களுக்கும்; அவனை காரணபூதனானவனைக் குறித்து; அணி அழகிய; ஆலியர் திருவாலியிலுள்ளவர்க்கு; கோன் தலைவனும்; மருவார் கறை நெடு எதிரிகளின் கறை படிந்த; வேல் வலவன் வேலாயுதத்தை ஆளவல்ல; கலிகன்றி திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த; சொல் ஐ இரண்டும் பத்துப் பசுரங்களையும்; முறை வழுவாமை முறை வழுவாமல்; வல்லார் ஓதுபவர்கள்; வான் உலகே பரமபதத்தை; முழுது ஆள்வர் முழுவதுமாக ஆளப்பெருவர்