Chapter 10

Thirukkovalur Perumal - (மஞ்சு ஆடு)

திருக்கோவலூர்
Thirukkovalur Perumal - (மஞ்சு ஆடு)
After experiencing the Divya Desams of Tondai Nadu, the āzhvār enjoys the Divya Desams of Nadu Nadu. In this region, Thirukkovalur is mentioned. The word Gopalan has transformed into Kovalon. This place is where Gopalan, the cowherd, resides. Hence, it is known as Thirukkovalur. It is also the place where the first three āzhvārs (Mudhal āzhvārs) met. Thirukkovalur is a prosperous place enriched by the flow of the river Thenpennai, also known as Dakshina Pinakini.
தொண்டை நாட்டுத் திருப்பதிகளை அனுபவித்த ஆழ்வார் நடுநாட்டுத் திருப்பதிகளை அனுபவிக்கிறார். இப்பகுதியில் திருக்கோவலூர் கூறப்படுகிறது. கோபாலன் என்கிற சொல் கோவலன் எனத் திரிந்தது. கோபாலன் எனப்படும் ஆயன் எழுந்தருளியிருக்கும் தலம் இது. அதனால் திருக்கோவலூர் எனப் பெயர் பெற்றது. முதலாழ்வார்கள் + Read more
Verses: 1138 to 1147
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: சீகாமரம்
Recital benefits: Will rule the world of Gods and see the Lord
  • PT 2.10.1
    1138 ## மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் *
    வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் *
    எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர் * இளந் தளிரில்
    கண்வளர்ந்த ஈசன் தன்னை *
    துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் *
    தூய நான்மறையாளர் சோமுச் செய்ய *
    செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் *
    திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 1 **
  • PT 2.10.2
    1139 கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம் *
    தீபம் கொண்டு அமரர் தொழப் பணம் கொள் பாம்பில் *
    சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை *
    தாம் இருவர் அடி வருடும் தன்மையானை **
    வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் * ஐந்து
    வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும் *
    சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும் * செல்வத்
    திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 2 **
  • PT 2.10.3
    1140 கொழுந்து அலரும் மலர்ச் சோலைக் குழாம்கொள் பொய்கைக் *
    கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி *
    அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி *
    அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை **
    எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட *
    இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட *
    செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும் *
    திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 3 **
  • PT 2.10.4
    1141 தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து *
    தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை *
    ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் *
    அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை **
    கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக் *
    குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு *
    தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த *
    திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 4 **
  • PT 2.10.5
    1142 கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி *
    கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள் *
    பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் *
    பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை **
    மறை வளரப் புகழ் வளர மாடம்தோறும் *
    மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத *
    சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் *
    திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 5 **
  • PT 2.10.6
    1143 உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று * அங்கு
    உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க *
    தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று *
    தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை **
    வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு *
    வியன் கலை எண் தோளினாள் விளங்கு * செல்வச்
    செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் *
    திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 6 **
  • PT 2.10.7
    1144 இருங் கைம்மா கரி முனிந்து பரியைக் கீறி *
    இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து *
    வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு *
    வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை **
    கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று *
    காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட *
    செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத் *
    திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 7 **
  • PT 2.10.8
    1145 பார் ஏறு பெரும் பாரம் தீரப் * பண்டு
    பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத் *
    தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை *
    செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை **
    போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும் *
    புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல் *
    சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் *
    திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 8 **
  • PT 2.10.9
    1146 தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு *
    சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற *
    காவடிவின் கற்பகமே போல நின்று *
    கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை **
    சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை *
    செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை *
    தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு *
    திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 9 **
  • PT 2.10.10
    1147 ## வாரணம் கொள் இடர் கடிந்த மாலை * நீல
    மரதகத்தை மழை முகிலே போல்வான் தன்னை *
    சீர் அணங்கு மறையாளர் நிறைந்த * செல்வத்
    திருக்கோவலூர் அதனுள் கண்டேன் என்று **
    வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் *
    வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார் *
    காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் *
    கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே 10 **