PT 2.10.5

வேதங்களை வளர்க்கும் இடம் இது

1142 கறைவளர்வேல்கரன்முதலாக்கவந்தன்வாலி
கணையொன்றினால்மடியஇலங்கைதன்னுள் *
பிறையெயிற்றுவாளரக்கர்சேனையெல்லாம்
பெருந்தகையோடுஉடந்துணித்தபெம்மான்தன்னை *
மறைவளரப்புகழ்வளரமாடந்தோறும்
மண்டபமொண்தொளியனைத்தும்வாரமோத *
சிறையணைந்தபொழிலணைந்ததென்றல்வீசும்
திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.
PT.2.10.5
1142 kaṟai val̤ar vel karaṉ mutalāk kavantaṉ vāli *
kaṇai ŏṉṟiṉāl maṭiya ilaṅkai-taṉṉul̤ *
piṟai ĕyiṟṟu vāl̤ arakkar ceṉai ĕllām *
pĕruntakaiyoṭu uṭaṉ tuṇitta pĕmmāṉ-taṉṉai- **
maṟai val̤arap pukazh val̤ara māṭamtoṟum *
maṇṭapam ŏṇ tŏl̤i aṉaittum vāram ota *
ciṟai aṇainta pŏzhil aṇainta tĕṉṟal vīcum *
tirukkovalūr-ataṉul̤-kaṇṭeṉ nāṉe-5 **

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1142. Our god who fought and killed with one arrow the Rākshasas Karan, Kavandan, Māli and the monkey king Vāli who carried spears smeared with blood, destroying the army of Rākshasas with teeth shining like crescent moons and their king Rāvanan in Lankā, stays in famous Thirukkovalur where devotees recite pāsurams on all the porches of shining palaces where a breeze blows from groves surrounded with ponds. I saw him there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கறை வளர் வேல் கறை படிந்த வேலையுடைய; கரன் முதலாக கரன் முதலாக; கவந்தன் வாலி கபந்தன் வாலி ஆகியோரை; கணை ஒன்றினால் மடிய ஓரம்பினால் அழித்து; இலங்கை தன்னுள் இலங்கையில்; பிறை எயிற்று பிறை போன்ற கோரைப்பற்களையும்; வாள் வளைந்த வாள்களையுமுடைய; அரக்கர் அரக்கர்களின்; சேனை எல்லாம் சேனைகளையெல்லாம்; பெரும் அவர்களது தலைவனான; தகையோடு இராவணனோடு; உடன் துணித்த அனைவரையும் அழித்த; பெம்மான் தன்னை எம்பெருமானை; மாடம் தோறும் ஒவ்வொரு வீடுகளிலும்; மறை வளர வேதகோஷம் ஓங்கவும்; புகழ் வளர அதனால் கீர்த்திவளரவும்; ஒண் தொளி அழகிய வீதிகளிலுள்ள; மண்டபம் அனைத்தும் மண்டபங்களிலெல்லாம்; வாரம் ஓத வைதிகர்கள் வேதம் ஓத; சிறை அணைந்த நீரகழி அருகேயிருக்கும்; பொழில் சோலைகளிலிருந்து வரும்; அணைந்த தென்றல் வீசும் தென்றல் காற்று வீசும்; திருக்கோவலூர் அதனுள் திருக்கோவலூர் அதனுள்; கண்டேன் நானே நான் கண்டேன்
kaṛai val̤ar heavily stained; vĕl one who has spear; karan mudhalā karan et al; kavandhan vāli those who are known as kabandhan, vāli et al; kaṇai onṛināl with an arrow; madiya to die; ilangai thannul̤ in lankā; piṛai bent like a crescent; eyiṛu having teeth; vāl̤ having sword as weapon; arakkar sĕnai ellām all of the armies of rākshasas; perum thagaiyŏdu udan along with rāvaṇa who was their leader; thuṇiththa severed and pushed down; pemmān thannai sarvĕṣvaran; mādam thŏṛum in all the houses; maṛai vĕdha gŏsham; val̤ara rising greatly; pugazh fame; val̤ara to increase; maṇdapam in the halls; oṇdu close to the town; ol̤i anaiththum in the choultries; vāram ŏdha to repeat what was learnt previously; siṛai water moat; aṇaindha in the gardens; pozhil in garden; aṇaindha rested on; thenṛal southerly breeśe; vīsum emitting fragrance; thirukkŏvalūr adhanul̤ in thirukkŏvalūr; nān kaṇdĕn ī got to see.