PT 2.10.10

இவற்றைப் படித்தோர் பரமனைக் காண்பர்

1147 வாரணங்கொள்இடர்கடிந்தமாலை நீல
மரதகத்தைமழைமுகிலேபோல்வான்தன்னை *
சீரணங்குமறையாளர்நிறைந்த செல்வத்
திருக்கோவலூரதனுள்கண்டேனென்று *
வாரணங்குமுலைமடவார்மங்கைவேந்தன்
வாள்கலியனொலியைந்துமைந்தும்வல்லார் *
காரணங்களால்உலகம்கலந்து அங்குஏத்தக்
கரந்துஎங்கும்பரந்தானைக்காண்பர்தாமே. (2)
PT.2.10.10
1147 ## vāraṇam kŏl̤ iṭar kaṭinta mālai * nīla
maratakattai mazhai mukile polvāṉ-taṉṉai *
cīr aṇaṅku maṟaiyāl̤ar niṟainta * cĕlvat
tirukkovalūr-ataṉul̤ kaṇṭeṉ ĕṉṟu **
vār aṇaṅku mulai maṭavār maṅkai ventaṉ *
vāṭ kaliyaṉ ŏli aintum aintum vallār *
kāraṇaṅkal̤āl ulakam kalantu aṅku ettak *
karantu ĕṅkum parantāṉaik kāṇpar-tāme-10 **

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1147. Kaliyan the king of Thirumangai, with a shining sword and the beloved of his queens, composed pāsurams on the cloud-colored Thirumāl, bright as a blue emerald, who saved Gajendra from his suffering. I saw him in rich Thirukkovalur filled with good, renowned Vediyars, proficient in the Vedās. If devotees learn and recite these ten pāsurams and praise him they will rule this world and will be able to see the omnipresent one.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாரணம் கொள் கஜேந்திரனடைந்த; இடர் கடிந்த துக்கத்தைப் போக்கின; மாலை பெருமானும்; நீல மரதகத்தை கருநெய்தற்பூ மரகதப்பச்சை; மழை முகிலே குளிர்ந்தமேகம் ஆகியவைகளை; போல்வான் தன்னை போன்றவனை; சீர் அனைவரும் விரும்பும்படியான; அணங்கு ஆத்ம குணங்கள் உடைய; மறையாளர் வைதிகர்கள் வாழும்; நிறைந்த செல்வ செல்வம் நிறைந்த; திருக்கோவலூர் அதனுள் திருக்கோவலூரில்; கண்டேன் என்று காணப் பெற்றேனென்று; வார் அணங்கு கச்சினால்; முலை மடவார் அழகுபெற்ற முலைகளையுடைய பெண்கள் நிறந்த; மங்கை வேந்தன் திருமங்கை நாட்டுக்குத் தலைவரும்; வாட் கலியன் வாளை உடைய ஆழ்வார் அருளிச்செய்த; ஒலி ஐந்தும் ஐந்தும் இப்பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓதுபவர்; உலகம் உலகத்திலுள்ள; காரணங்களால் செல்வம் பெறுவதற்கு; கலந்து அங்கு ஏத்த திரண்டு வந்து துதிக்க; கரந்து எங்கும் மறைந்தும்; பரந்தானை வியாபித்தும் இருக்கின்ற; காண்பர் தாமே பரமாத்மாவை வணங்கப் பெறுவர்கள்
vāraṇam ṣrī gajĕndhrāzhwān; kol̤ had; idar sorrow; kadindha one who eliminated; mālai being affectionate towards devotees; neelam karuneydhal flower; maradhagam green gem; mazhai cool; mugil cloud; pŏlvān thannai sarvĕṣvaran who has physical beauty like these; aṇangu desired by all; sīr having noble qualities; maṛaiyāl̤ar brāhmaṇas; niṛaindha abundant; selvam having wealth; thirukkŏvalūr adhanul̤ in thirukkŏvalūr; kaṇdĕn enṛu saying -ī got to see-; vār wearing knotted clothes; aṇangu beautiful; mulai having bosoms; madavār filled with ladies; mangai for thirumangai region; vĕndhan being the king; vāl̤ having sword; kaliyan mercifully spoken by āzhvār; oli having garlands of words; aindhum aindhum these ten pāsurams; vallār those who can learn; ulagam those who are in this world; kāraṇangal̤āl to achieve goals starting with worldly wealth; kalandhu arrived together; ĕththa surrendering with praises (though he is omnipresent); karandhu being invisible to all; engum parandhānai sarvĕṣvaran who is all pervading; kāṇbar will get to see