PT 2.10.4

அடியார்களின் ஆரமுது தங்கும் இடம் இது

1141 தாங்கரும்போர்மாலிபடப்பறவையூர்ந்து
தராதலத்தோர்குறைமுடித்ததன்மையானை *
ஆங்கரும்பிக்கண்ணீர்சோர்ந்துஅன்புகூரும்
அடியவர்கட்குஆரமுதமானான்தன்னை *
கோங்கரும்புசுரபுன்னைகுரவார்சோலைக்
குழாவரிவண்டுஇசைபாடும்பாடல்கேட்டு
தீங்கரும்புகண்வளரும்கழனிசூழ்ந்த
திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.
PT.2.10.4
1141 tāṅku arum por māli paṭap paṟavai ūrntu *
tarātalattor kuṟai muṭitta taṉmaiyāṉai *
āṅku arumpik kaṇ nīr corntu aṉpu kūrum *
aṭiyavarkaṭku ār amutam āṉāṉ-taṉṉai- **
koṅku arumpu curapuṉṉai kuravu ār colaik *
kuzhām vari vaṇṭu icai pāṭum pāṭal keṭṭu *
tīṅ karumpu kaṇval̤arum kazhaṉi cūzhnta *
tirukkovalūr-ataṉul̤-kaṇṭeṉ nāṉe-4 **

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1141. The lord, sweet nectar for his devotees who shed tears of devotion for him, rode on Garudā, fought with the Māli, strong in battle, conquered and destroyed the Rakshasās and released the people of the earth from their troubles. I saw him in Thirukkovalur surrounded with groves where kongu trees, budding surapunnai trees and kuravam trees grow and the sweet sugarcane plants in the fields listen to the singing of swarms of lined bees and sleep.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாங்கு அரும் கொடிய; போர் யுத்தம் செய்யக்கூடிய; மாலி படப் மாலி என்னும் அரக்கனை; பறவை கருடன் மேல் வந்து; ஊர்ந்து போரில் அழித்து; தராதலத்தோர் பூமியிலுள்ளோர்; குறை முடித்த குறை தீர்த்த; தன்மையானை எம்பெருமானை; ஆங்கு அரும்பிக் ஆனந்தக்; கண் நீர் கண்ணீருடன்; சோர்ந்து அன்பு கூரும் பக்தி பண்ணும்; அடியவர்கட்கு பக்தர்களுக்கு; ஆர் அமுதம் அமுதம் போன்றிருந்த; ஆனான் தன்னை எம்பெருமானை; கோங்கு அரும்பு கோங்கு பூக்களும்; சுரபுன்னை சுரபுன்னைகளும்; குரவு ஆர் குரவுகளும் செறிந்திருக்கிற; சோலை சோலைகளிலே; குழாம் வரி வண்டு வரி வண்டு கூட்டம்; இசைபாடும் ரீங்கரித்து இசைபாடும்; பாடல் கேட்டு பாடல் கேட்டு; தீங் கரும்பு இனிய கரும்புகள்; கண்வளரும் கணுக்கணுவாக வளரும்; கழனி சூழ்ந்த வயல்கள் சூழ்ந்த; திருக்கோவலூர் அதனுள் திருக்கோவலூர் அதனுள்; கண்டேன் நானே நான் கண்டேன்
thāngu arum unable to bear for anyone; pŏr fighting the battle; māli rākshasas starting with māli; pada to die; paṛavai periya thiruvadi (garudāzhvār); ūrndhu ride; tharā thalaththŏr of those who are present on earth; kuṛai complaints; mudiththa one who eliminated; thanmaiyānai having the nature; āngu while eliminating the enemies; kaṇṇīr tears; arumbi appeared; sŏrndhu overflowing; anbu kūrum having great love; adiyavargatku for servitors; ār complete; amudhamānān thannai one who is enjoyable like nectar; kŏngu arumbu kŏngu flowers; surapunnai surapunnai trees; kuravu kuravu trees; ār present densely; sŏlai in gardens; vari striped; vaṇdu beetles-; kuzhām groups (having drunk honey); isai pādum humming; pādal kĕttu hearing the songs; thīm karumbu sweet sugarcanes; kaṇ val̤arum growing by one part; kazhani by fertile fields; sūzhndha surrounded; thirukkŏvalūr adhanul̤ in thirukkŏvalūr; nān kaṇdĕn ī got to see.