PT 2.10.7

கம்சனுக்கு நஞ்சானவன் இருக்கும் இடம்

1144 இருங்கைம்மாகரிமுனிந்துபரியைக்கீறி
இனவிடைகளேழடர்த்துமருதம்சாய்த்து *
வரும்சகடம்இறவுதைத்துமல்லையட்டு
வஞ்சகஞ்செய்கஞ்சனுக்குநஞ்சானானை *
கருங்கமுகுபசும்பாளைவெண்முத்துஈன்று
காயெல்லாம்மரகதமாய்ப்பவளம்காட்ட *
செருந்திமிகமொட்டலர்த்தும்தேன்கொள்சோலைத்
திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.
PT.2.10.7
1144 iruṅ kaimmā kari muṉintu pariyaik kīṟi *
iṉa viṭaikal̤ ezh aṭarttu marutam cāyttu *
varum cakaṭam iṟa utaittu mallai aṭṭu *
vañcam cĕy kañcaṉukku nañcu āṉāṉai- **
karuṅ kamuku pacum pāl̤ai vĕṇ muttu īṉṟu *
kāy ĕllām marakatam āy paval̤am kāṭṭa *
cĕrunti mika mŏṭṭu alarttum teṉ kŏl̤ colait *
tirukkovalūr-ataṉul̤-kaṇṭeṉ nāṉe-7 **

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1144. The lord grew angry at the elephant Kuvalayābeedam and killed it, fought with the Rākshasa Kesi when he came as a horse, conquered the seven bulls to marry Nappinnai, killed the wrestlers when they came as marudam trees, killed Sakatāsuran when he came as a cart and fought and killed his enemy, the evil Kamsan. I saw him in Thirukkovalur surrounded with groves where the buds of cherundi flowers bloom and drip honey and kamugu trees ripen with dark fruits and pālai trees spill white pearls as their dried beans shine like emeralds and their ripe fruits glow like corals.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இருங் கை நீண்ட துதிக்கையையுடைய; மா கரி பெரிய குவலயாபீடமென்னும்; முனிந்து யானையை முடித்து; பரியைக் குதிரை வடிவுடன் வந்த கேசியை; கீறி பிளந்து; இன விடைகள் ஏழ் நப்பின்னைக்காக ஏழு ரிஷபங்களை; அடர்த்து அடக்கி; மருதம் சாய்த்து இரட்டை மருதமரத்தை முறித்து; வரும் சகடம் இற சகடம் முறியும்படி; உதைத்து அதனை உதைத்து; மல்லை அட்டு மல்லர்களை த்வம்ஸம்பண்ணி; வஞ்சம் செய் வஞ்சனை செய்த; கஞ்சனுக்கு கம்ஸனுக்கு; நஞ்சு விஷமாகி; ஆனானை அவனையும் முடித்த பெருமானை; கருங் கமுகு கறுத்த பாக்கு மரங்கனினுடைய; பசும் பாளை பசுமையான பாளையானது; வெண் வெளுத்த; முத்து ஈன்று முத்துக்களைத் தந்து; காய் எல்லாம் அதன் காய்களெல்லாம்; மரகதம் ஆய் மரகதம் போன்றும் கனிகள்; பவளம் காட்ட பவழங்களைக் காட்டவும்; செருந்தி மிக சுரபுன்னைகள்; மொட்டு அலர்த்தும் மொக்குகளை மலர்த்தும்; தேன் கொள் தேன் நிறைந்த; சோலை சோலைகளையுடைய; திருக்கோவலூர் அதனுள் திருக்கோவலூர் அதனுள்; கண்டேன் நானே நான் கண்டேன்
iru long; kai having trunk; huge; kari kuvalayāpīdam [regal elephant of king kamsan]; munindhu mercifully showed anger; pariyai the mouth of kĕṣi, the horse; kīṛi tore; inam matching with each other; ĕzhu vidaigal̤ seven bulls; adarththu killed; marudham marudha trees; sāyththu broke; varum moving towards him (due to being possessed by the demon); sagadam wheel; iṛa to break; udhaiththu kicked with divine feet; mallai the wrestlers; attu killed; vanjam sey thought to kill him by mischief; kanjanukku for kamsa; nanjānānai one who became the god of death; karu having black complexion; kamugu areca trees; pasum pāl̤ai fresh spathes; vel̤ whitish; muththu pearls; īnṛu yield; kāyĕllām its unripened fruits; maradhagamāy showed green gem (and the fruits); paval̤am kātta showed corals; serundhi surapunnai tree; mottu buds; miga specially; alarththum blossoms; thĕn kol̤ having honey; thirukkŏvalūr adhanul̤ in thirukkŏvalūr; nān kaṇdĕn ī got to see.