PT 2.10.3

கஜேந்திரனுக்கு அருள்செய்தவன் இடம் இது

1140 கொழுந்தலரும்மலர்ச்சோலைக்குழாங்கொள்பொய்கைக்
கோள்முதலைவாளெயிற்றுக்கொண்டற்குஎள்கி *
அழுந்தியமாகளிற்றினுக்குஅன்றுஆழியேந்தி
அந்தரமேவரத்தோன்றி அருள்செய்தானை *
எழுந்தமலர்க்கருநீலம்இருந்தில்காட்ட
இரும்புன்னைமுத்தரும்பிச்செம்பொன்காட்ட *
செழுந்தடநீர்க்கமலம்தீவிகைபோல்காட்டும்
திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.
PT.2.10.3
1140 கொழுந்து அலரும் மலர்ச் சோலைக் குழாம்கொள் பொய்கைக் *
கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி *
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி *
அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை **
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட *
இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட *
செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும் *
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 3 **
1140 kŏzhuntu alarum malarc colaik kuzhāmkŏl̤ pŏykaik *
kol̤ mutalai vāl̤ ĕyiṟṟuk kŏṇṭaṟku ĕl̤ki *
azhuntiya mā kal̤iṟṟiṉukku aṉṟu āzhi enti *
antarame varat toṉṟi arul̤ cĕytāṉai- **
ĕzhunta malark karu nīlam iruntil kāṭṭa *
irum puṉṉai muttu arumpic cĕm pŏṉkāṭṭa *
cĕzhun taṭa nīrk kamalam tīvikaipol kāṭṭum *
tirukkovalūr-ataṉul̤-kaṇṭeṉ nāṉe-3 **

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1140. When the pious elephant Gajendra was caught by a terrible crocodile with sharp sword-like teeth in the pool in a grove where tender shoots and blossoms bloomed, he was terrified and called the lord, and our god with his discus came to the pond, killed the crocodile, saved Gajendra and gave him his grace. I saw our lord in Thirukkovalur where dark neelam blossoms bloom, large punnai buds open with the color of red gold and lotuses in the beautiful ponds shine like fires.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கொழுந்து அலரும் தளிர்களையும் மலர்களையும்; மலர்ச்சோலை பூக்களையுமுடைய சோலை; குழாங்கொள் பொய்கை சூழ்ந்த தடாகத்திலே; கோள் முதலை வாள் வலிமையுள்ள முதலை வாள் போன்ற; எயிற்று கொண்டற்கு பற்களைக் கொண்டு பிடித்ததினால்; எள்கி அழுந்திய மா மெலிந்து மடுவிலே மூழ்கின; களிற்றினுக்கு யானைக்கு; அன்று ஆதிமூலமே என்று கூக்குரலிட்ட அன்று; ஆழி ஏந்தி சக்கரத்தைக் கொண்டு; அந்தரமே வரத் தோன்றி ஆகாசத்தில் வந்து தோன்றி; அருள் செய்தானை எழுந்த அருள் செய்த பெருமானை; மலர்க் கரு நீலம் நீரில் தோன்றும் கருநெய்தல் பூவானது; இருந்தில் காட்ட கருத்த நிறத்தைக் காட்டவும்; இரும் புன்னை அரும்பி புன்னை அரும்பு; முத்து முத்துக்களையும்; செம் பொன் காட்ட பொன்னையும் காட்டவும்; செழுந் தட நீர்க் கமலம் தடாகங்களில் தாமரைகள்; தீவிகைபோல் காட்டும் விளக்குப்போலே விளங்கவும் பெற்ற; திருக்கோவலூர் அதனுள் திருக்கோவலூரதனுள்; கண்டேன் நானே நான் கண்டேன்
kozhundhu sprouts; alarum blossoming; malar having flowers; sŏlaik kuzhām kol̤ being surrounded by garden; poygai in pond; kŏl̤ mudhalai strong crocodile; vāl̤ sword like; eyiṛu with teeth; koṇdaṛku having been grabbed; el̤gi became weak; azhundhiya drowned (into the pond); mā kal̤iṝinukku for gajĕndhrāzhwān; anṛu when he was invoked saying -ādhimūlamĕ-; āzhi divine chakra; ĕndhi carrying; andharam sky; ĕvara to be filled; thŏnṛi appeared; arul̤ seydhānai one who showed his mercy (to that elephant); ezhundha born in water; karu neela malar karuneydhal flower; irundhil charcoal; kātta as it showed; irum punnai huge punnai trees (through the buds); muththuk kātta as they showed pearls; arumbi blossomed; sem pon kātta as they showed fresh gold; sezhunīr having abundance of water; thadam in ponds; kamalam lotus flowers; thīvigai pŏl like lamp; kāttum appearing; thirukkŏvalūr adhanul̤ in thirukkŏvalūr; nān kaṇdĕn ī got to see.