PT 2.10.9

அருள்புரியும் கற்பகமரம் போன்றவனைக் கண்டேன்

1146 தூவடிவின்பார்மகள்பூமங்கையோடு
சுடராழிசங்குஇருபால்பொலிந்துதோன்ற *
காவடிவின்கற்பகமேபோலநின்று
கலந்தவர்கட்குஅருள்புரியும்கருத்தினானை *
சேவடிகைதிருவாய்கண்சிவந்தவாடை
செம்பொன்செய் திருவுருவமானான்தன்னை *
தீவடிவின்சிவனயனேபோல்வார்மன்னு
திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.
PT.2.10.9
1146 tū vaṭiviṉ pār-makal̤ pū-maṅkaiyoṭu *
cuṭar āzhi caṅku irupāl pŏlintu toṉṟa *
kāvaṭiviṉ kaṟpakame pola niṉṟu *
kalantavarkaṭku arul̤puriyum karuttiṉāṉai **
cevaṭi kai tiruvāy kaṇ civanta āṭai *
cĕm pŏṉ cĕy tiru uruvam āṉāṉ-taṉṉai- *
tī vaṭiviṉ civaṉ ayaṉe polvār maṉṉu *
tirukkovalūr-ataṉul̤-kaṇṭeṉ nāṉe-9 **

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1146. The lord who has beautiful hands, legs, a divine mouth and eyes, carries a shining discus and a conch in his hands and stays with the beautiful earth goddess and Lakshmi, is like the Karpaga tree in Indra’s garden and gives his grace to the gods and all others. His godly form is adorned with red clothes and ornamented with pure gold. I saw him in everlasting Thirukkovalur where Vediyar live, divine like Nānmuhan and like Shivā who is colored fire red.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூ வடிவின் அழகிய வடிவையுடைய; பார் மகள் பூமாதேவியையும்; பூ மங்கையோடு மஹலக்ஷ்மியையும்; சுடர் ஆழி சங்கு சங்கு சக்கரம்; இருபால் இரண்டு கைகளிலும்; பொலிந்து தோன்ற பள பளவென்று பிரகாசிக்க; காவடிவின் கற்பகச் சோலையாகவே இருக்கும்; கற்பகமே போல நின்று கற்பகம்போல நின்று; கலந்தவர்கட்கு பக்தர்களுக்கு; அருள்புரியும் அருள்புரியும்; கருத்தினானை திருவுள்ளமுடையவனும்; சேவடி கை பாதங்கள் கை; திருவாய் கண் வாய் கண்; சிவந்த ஆடை சிவந்த ஆடை; செம் பொன் செய் செம்பொன் போன்ற; திரு உருவம் உருவமுடைய; ஆனான் தன்னை எம்பெருமானை; தீ வடிவின் நெருப்புப் போன்ற வடிவை யுடைய; சிவன் சிவனும்; அயனே போல்வார் பிரமனும் போல்; மன்னு திருக்கோவலூர் அதனுள் திருக்கோவலூர் அதனுள் நிரந்தரமாக வசிக்கும; கண்டேன் நானே கண்டேன் நான்
thū beautiful; vadivil having form; pār magal̤ŏdu with ṣrī bhūmip pirātti; pū mangaiyŏdu with periya pirāttiyār; sudar radiant; āzhi thiruvāzhiyāzhwān (divine chakra); sangu ṣrī pānchajanyāzhwān (divine conch); irupāl on both sides; polindhu thŏnṛa appearing effulgently; kā vadivil grown as a garden; kaṛpagam pŏla ninṛu standing like a kalpaka tree; kalandhavargatku for those who hold emperumān as all types of relations; arul̤ puriyum who eagerly gives; karuththinānai one who has divine heart; reddish; adi divine feet; kai divine hands; thiruvāy divine lips; kaṇ divine eyes; sivandha ādai divine waist garment (having these); sembon sey like beautiful gold; thiruvuruvam ānān thannai one who has a beautiful form; thī vadivil in the form of fire; sivan rudhran; ayan pŏlvār and like brahmā, who are experts in creation and annihilation; mannu eternally residing; thirukkŏvalūr adhanul̤ in thirukkŏvalūr; nān kaṇdĕn ī got to see.