Chapter 3

Her Lamentation of separation from Him 2 - (மன் இலங்கு)

தலைவி இரங்கிக் கூறல்
Her Lamentation of separation from Him 2 - (மன் இலங்கு)
This section is also composed with the āzhvār in the role of the Nayaki (heroine). The āzhvār finds solace in the fact that his anxiety and distress are entirely centered on the Lord. These verses, arranged in the Antādhi style, reflect the āzhvār's satisfaction and contentment, knowing that his emotions are solely devoted to the Lord.
இதுவும் அது. இதுவும் ஆழ்வார் நாயகி நிலையில் இருந்துகொண்டு பாடும் பகுதியாகும். தம்முடைய விடையும் பதற்றமும் எம் பெருமானைப் பற்றியனவாகவே இருத்தலை நினைத்து மன நிறைவு அடைகிறார் ஆழ்வார். ஈண்டுப் பாசுரங்கள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.
Verses: 1972 to 1981
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Getting freed from all hurdles
  • PT 11.3.1
    1972 ## மன் இலங்கு பாரதத்துத் * தேர் ஊர்ந்து * மாவலியைப்
    பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து * பொரு கடல் சூழ் **
    தென் இலங்கை ஈடு அழித்த * தேவர்க்கு இது காணீர் *
    என் இலங்கு சங்கோடு * எழில் தோற்றிருந்தேனே
  • PT 11.3.2
    1973 இருந்தான் என் உள்ளத்து * இறைவன் கறை சேர் *
    பருந் தாள் களிற்றுக்கு * அருள் செய்த செங் கண் **
    பெருந் தோள் நெடுமாலைப் * பேர் பாடி ஆட *
    வருந்தாது என் கொங்கை * ஒளி மன்னும் அன்னே
  • PT 11.3.3
    1974 அன்னே இவரை * அறிவன் மறை நான்கும் *
    முன்னே உரைத்த * முனிவர் இவர் வந்து **
    பொன் ஏய் வளை கவர்ந்து * போகார் மனம் புகுந்து *
    என்னே இவர் எண்ணும் * எண்ணம்? அறியோமே
  • PT 11.3.4
    1975 அறியோமே என்று * உரைக்கல் ஆமே எமக்கு *
    வெறி ஆர் பொழில் சூழ் * வியன் குடந்தை மேவி **
    சிறியான் ஓர் பிள்ளை ஆய் * மெள்ள நடந்திட்டு *
    உறி ஆர் நறு வெண்ணெய் * உண்டு உகந்தார் தம்மையே?
  • PT 11.3.5
    1976 தம்மையே நாளும் * வணங்கித் தொழுவார்க்கு *
    தம்மையே ஒக்க * அருள் செய்வர் ஆதலால் **
    தம்மையே நாளும் * வணங்கித் தொழுது இறைஞ்சி *
    தம்மையே பற்றா * மனத்து என்றும் வைத்தோமே
  • PT 11.3.6
    1977 வைத்தார் அடியார் * மனத்தினில் வைத்து * இன்பம்
    உய்த்தார் ஒளி விசும்பில் * ஓர் அடி வைத்து ** ஓர் அடிக்கும்
    எய்த்தாது மண் என்று * இமையோர் தொழுது ஏத்தி *
    கைத்தாமரை குவிக்கும் * கண்ணன் என் கண்ணனையே
  • PT 11.3.7
    1978 கண்ணன் மனத்துள்ளே * நிற்கவும் கை வளைகள் *
    என்னோ கழன்ற? * இவை என்ன மாயங்கள்? **
    பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க * அவன் மேய
    அண்ணல் மலையும் * அரங்கமும் பாடோமே?
  • PT 11.3.8
    1979 பாடோமே எந்தை பெருமானை? * பாடிநின்று
    ஆடோமே * ஆயிரம் பேரானை? * பேர் நினைந்து
    சூடோமே ** சூடும் துழாய் அலங்கல்? சூடி * நாம்
    கூடோமே கூடக் * குறிப்பு ஆகில்? நல் நெஞ்சே
  • PT 11.3.9
    1980 நல் நெஞ்சே நம் பெருமான் * நாளும் இனிது அமரும் *
    அன்னம் சேர் கானல் * அணி ஆலி கைதொழுது **
    முன்னம் சேர் வல்வினைகள் போக * முகில் வண்ணன் *
    பொன்னம் சேர் சேவடிமேல் * போது அணியப்பெற்றோமே
  • PT 11.3.10
    1981 ## பெற்று ஆரார் * ஆயிரம் பேரானை * பேர் பாடப்
    பெற்றான் * கலியன் ஒலிசெய் தமிழ் மாலை **
    கற்றார் ஓ முற்று உலகு ஆள்வர் * இவை கேட்கல்
    உற்றார்க்கு * உறு துயர் இல்லை உலகத்தே