PT 11.3.10

இவை பாடக் கேட்டோர்க்குத் துயரில்லை

1981 பெற்றாரார் ஆயிரம்பேரானை * பேர்பாடப்
பெற்றான் கலியனொலிசெய்தமிழ்மாலை *
கற்றார்ஓ! முற்றுலகாள்வர் * இவைகேட்க
லுற்றார்க்கு உறுதுயரில்லைஉலகத்தே. (2)
1981 ## pĕṟṟu ārār- * āyiram perāṉai * per pāṭap
pĕṟṟāṉ * kaliyaṉ ŏlicĕy tamizh-mālai **
kaṟṟār o muṟṟu ulaku āl̤var * ivai keṭkal
uṟṟārkku * uṟu tuyar illai ulakatte

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1981. Kaliyan the poet composed ten Tamil musical pāsurams on the lord who has a thousand names. If devotees learn these names, they will rule all the three worlds. They who hear these pāsurams will live without any troubles in this world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆயிரம் ஆயிரம்; பேரானை நாமங்களுடைய பெருமானின்; பேர் பாட நாமங்களை பாடக்கூடிய பாக்யம்; பெற்றான் பெற்றவரான; கலியன் திருமங்கை ஆழ்வார்; ஒலி செய் அருளிச்செய்த; தமிழ் மாலை தமிழ்ப் பாசுரங்களை; கற்றார் ஓ! கற்றவர்கள் அந்தப் பெருமானை; பெற்று பெற்றும்; ஆரார் திருப்தியடைய மாட்டார்க்ள்; முற்று உலகு மூன்று உலகங்களையும்; ஆள்வர் ஆள்வார்கள்; இவை கேட்கல் இப்பாசுரங்களைக் கேட்கும்; உற்றார்க்கு மக்களுக்கு; உலகத்தே உலகத்தில் எந்தவித; உறு துயர் இல்லை துயரமும் ஏற்படாது