PT 11.3.1

எம்பெருமானை ஆசைப்பட்டு எழில் இழந்தேன்!

1972 மன்னிலங்குபாரதத்துத் தேரூர்ந்து * மாவலியைப்
பொன்னிலங்குதிண்விலங்கில்வைத்து * பொருகடல்சூழ்
தென்னிலங்கையீடழித்த தேவர்க்குஇதுகாணீர் *
என்னிலங்குசங்கோடு எழில்தோற்றிருந்தேனே. (2)
1972 ## maṉ ilaṅku pāratattut * ter ūrntu * māvaliyaip
pŏṉ ilaṅku tiṇ vilaṅkil vaittu * pŏru kaṭal cūzh **
tĕṉ ilaṅkai īṭu azhitta * tevarkku-itu kāṇīr- *
ĕṉ ilaṅku caṅkoṭu * ĕzhil toṟṟirunteṉe

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1972. She says, “He drove a shining chariot in the Bhārathā war and he measured the world in three footsteps at Mahābali’s sacrifice. He fought with the Rākshasas and destroyed the pride of Lankā. See, my conch bangles have grown loose and I have lost my beauty because I love him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன் இலங்கு சிறந்த பல அரசர்கள் பங்கேற்ற; பாரதத்து பாரதயுத்தத்தில்; தேர் ஊர்ந்து தேர் ஓட்டினவனும்; மாவலியை மஹாபலியை; பொன் இலங்கு பொன்மயமான விலங்கால்; திண் விலங்கில் சிறைபடுத்தி; வைத்து வைத்தவனும்; பொரு கடல் சூழ் அலைகடலால் சூழ்ந்த; தென் இலங்கை தென் இலங்கையின்; ஈடு அழித்த பெருமையை அழித்தவனுமான; தேவர்க்கு தேவர்க்கு; என் இலங்கு என் ஒளிமிக்க; சங்கோடு வளைகளையும்; எழில் சரீர அழகையும்; தோற்றிருந்தேனே இழந்தேன்; இது காணீர் அவன் அருள் இது தானோ?