PT 11.3.6

கண்ணனைக் கருத்தில் இருத்தி அடியார் இன்புற்றனர்

1977 வைத்தார்அடியார் மனத்தினில்வைத்து * இன்பம்
உற்றார்ஒளிவிசும்பில் ஓரடிவைத்து * ஓரடிக்கும்
எய்த்தாதுமண்ணென்று இமையோர்தொழுதிறைஞ்சி *
கைத்தாமரைகுவிக்கும் கண்ணன்என்கண்ணனையே.
1977 vaittār aṭiyār * maṉattiṉil vaittu * iṉpam
uyttār-ŏl̤i vicumpil * or aṭi vaittu ** or aṭikkum
ĕyttātu maṇ ĕṉṟu * imaiyor tŏzhutu etti *
kaittāmarai kuvikkum * kaṇṇaṉ ĕṉ kaṇṇaṉaiye

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1977. Kannan measured the world with one foot and the sky with the other and his devotees keep his feet in their hearts. The gods in the sky worship him folding their lotus hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒளி சூரிய சந்திரர்கள் சஞ்சரிக்கும் ஒளி; விசும்பில் மிக்க ஆகாயத்தில்; ஓர் அடி ஓரு அடியை; வைத்து திருவிக்கிரமனாக வைத்து; ஓர் அடிக்கும் மற்றொரு திருவடிக்கு; எய்த்தாது மண் என்று பூமி போதாதே! என்று; இமையோர் தேவர்கள்; தொழுது ஏத்தி வணங்கித் துதித்து; கைத்தாமரை தங்கள் கைகளை தாமரை; குவிக்கும் போல் குவித்து அஞ்சலி செய்தனர்; கண்ணன் பெருமானான; என் கண்ணனையே கண்ணனையே; அடியார் சிறப்பான அடியார்கள்; மனத்தினில் தங்கள் மனத்தினில்; வைத்தார் வைத்தனர்; வைத்து வைத்ததனால் எம்பெருமானின்; இன்பம் குணானுபவமான இன்பம்; உய்த்தார் அடைந்தனர்