PT 11.3.9

கண்ணனைப் பூசித்தால் வினைகள் நீங்கும்

1980 நன்னெஞ்சே! நம்பெருமான் நாளும்இனிதமரும் *
அன்னம்சேர்கானல் அணியாலிகைதொழுது *
முன்னம்சேர்வல்வினைகள்போக முகில்வண்ணன் *
பொன்னஞ்சேர்சேவடிமேல் போதணியப்பெற்றோமே.
1980 nal nĕñce nam pĕrumāṉ * nāl̤um iṉitu amarum *
aṉṉam cer kāṉal * aṇi āli kaitŏzhutu **
muṉṉam cer valviṉaikal̤ poka * mukil vaṇṇaṉ *
pŏṉṉam cer cevaṭimel * potu aṇiyappĕṟṟome

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1980. O good heart! Let us fold our hands and worship him who stays happily in Thiruvāli where swans wander on the seashore so that our bad karmā will go away, and let us wear flowers from the divine golden feet of the lord who has the color of a cloud.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நெஞ்சே! நல்ல மனமே!; நம் பெருமான் நம் பெருமான்; நாளும் எப்போதும்; இனிது விரும்பி மகிழ்ந்து; அமரும் இருக்குமிடம்; அன்னம் அன்னப்பறவைகள்; சேர் சேர்ந்து வாழும்; கானல் அணி நெய்தல் நிலங்களை உடைய; ஆலி கை தொழுது திருவாலியைத் தொழுது; முன்னம் அனாதி காலமாக; சேர் சேர்ந்திருக்கும்; வல்வினைகள் கொடிய பாபங்கள்; போக நீங்க; முகில் வண்ணன் மேகவண்ணனின்; பொன்னம் சேர் பொன்மயமான; சேவடி மேல் திருவடிகளின் மேல்; போது அணிய மலர்களைத் தூவி வணங்க; பெற்றோமே பெற்றோம்