PT 11.3.5

கண்ணன் அருள் கிடைப்பது திண்ணம்

1976 தம்மையேநாளும் வணங்கித்தொழுவார்க்கு *
தம்மையேயொக்க அருள்செய்வராதலால் *
தம்மையேநாளும் வணங்கித்தொழுதிறைஞ்சி *
தம்மையேபற்றா மனத்துஎன்றும்வைத்தோமே.
1976 tammaiye nāl̤um * vaṇaṅkit tŏzhuvārkku *
tammaiye ŏkka * arul̤ cĕyvar ātalāl **
tammaiye nāl̤um * vaṇaṅkit tŏzhutu iṟaiñci *
tammaiye paṟṟā * maṉattu ĕṉṟum vaittome

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1976. If devotees bow to him and worship him every day he gives his grace to them and so we also bow and worship the lord and keep him in our mind as our refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தம்மையே நாளும் எப்போதும் பெருமானையே; வணங்கித் வணங்கி; தொழுவார்க்கு தொழுவார்க்கு; தம்மையே தம்மைப் போலாகும்படி; ஒக்க தமக்கு சமமாக இருக்கும்படி; அருள் செய்வர் அருள் செய்வார்; ஆதலால் ஆதலால்; தம்மையே நாளும் அவரையே எப்போதும்; வணங்கித் தொழுது வணங்கித் தொழுது; இறைஞ்சி இறைஞ்சி; தம்மையே அவரையே எப்போதும்; பற்றா உபாயமாக பற்றும்படியான; மனத்து மனம் என்றும்; என்றும் இருக்க வேண்டும் என்று; வைத்தோமே உறுதி கொண்டோம்