Chapter 2

Her Lamentation of separation from Him 1 - (குன்றம் எடுத்து)

தலைவி பிரிவு ஆற்றாது வருந்திக் கூறுதல்
Her Lamentation of separation from Him 1 - (குன்றம் எடுத்து)
In this section, the āzhvār portrays himself as the heroine, expressing the sorrow and distress caused by the separation from the beloved Lord, the hero. He vividly conveys the pain and longing felt in the absence of the Lord, capturing the deep emotional turmoil and heartache experienced due to this separation.
ஆழ்வார் தம்மைத் தலைமகளாக அமைத்துக்கொண்டு, பகவானாகிய நாயகனது பிரிவால் வருந்துதல்போல் வருத்தத்தைப் புலப்படுத்தும் பகுதி இது.
Verses: 1962 to 1971
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will not get affected by the results of karma
  • PT 11.2.1
    1962 ## குன்றம் எடுத்து மழை தடுத்து * இளையாரொடும் *
    மன்றில் குரவை பிணைந்த மால் * என்னை மால்செய்தான் **
    முன்றில் தனி நின்ற பெண்ணைமேல் * கிடந்து ஈர்கின்ற *
    அன்றிலின் கூட்டைப் * பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ?
  • PT 11.2.2
    1963 பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து * அரி மாச் செகுத்து *
    ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு ** வன் பேய் முலை
    வாங்கி உண்ட * அவ் வாயன் நிற்க இவ் ஆயன் வாய் *
    ஏங்கு வேய்ங்குழல் * என்னோடு ஆடும் இளமையே
  • PT 11.2.3
    1964 மல்லொடு கஞ்சனும் * துஞ்ச வென்ற மணிவண்ணன் *
    அல்லி மலர்த் தண் துழாய் * நினைந்திருந்தேனையே **
    எல்லியில் மாருதம் * வந்து அடும் அது அன்றியும் *
    கொல்லை வல் ஏற்றின் மணியும் * கோயின்மை செய்யுமே
  • PT 11.2.4
    1965 பொருந்து மா மரம் * ஏழும் எய்த புனிதனார் *
    திருந்து சேவடி * என் மனத்து நினைதொறும் **
    கருந் தண் மா கடல் * கங்குல் ஆர்க்கும் அது அன்றியும் *
    வருந்த வாடை வரும் * இதற்கு இனி என் செய்கேன்?
  • PT 11.2.5
    1966 அன்னை முனிவதும் * அன்றிலின் குரல் ஈர்வதும் *
    மன்னு மறி கடல் ஆர்ப்பதும் * வளை சோர்வதும் **
    பொன் அம் கலை அல்குல் * அன்ன மென் நடைப் பூங் குழல் *
    பின்னை மணாளர் * திறத்தம் ஆயின பின்னையே
  • PT 11.2.6
    1967 ஆழியும் சங்கும் உடைய * நங்கள் அடிகள் தாம் *
    பாழிமையான கனவில் * நம்மைப் பகர்வித்தார் **
    தோழியும் நானும் ஒழிய * வையம் துயின்றது *
    கோழியும் கூகின்றது இல்லைக் * கூர் இருள் ஆயிற்றே
  • PT 11.2.7
    1968 காமன் தனக்கு முறை அல்லேன் * கடல் வண்ணனார் *
    மா மணவாளர் * எனக்குத் தானும் மகன் சொல்லில் **
    யாமங்கள் தோறு எரி வீசும் * என் இளங் கொங்கைகள் *
    மா மணி வண்ணர் * திறத்தவாய் வளர்கின்றவே
  • PT 11.2.8
    1969 மஞ்சு உறு மாலிருஞ்சோலை * நின்ற மணாளனார் *
    நெஞ்சம் நிறைகொண்டு போயினார் * நினைகின்றிலர் **
    வெம் சுடர் போய் விடியாமல் * எவ்விடம் புக்கதோ? *
    நஞ்சு உடலம் துயின்றால் * நமக்கு இனி நல்லதே
  • PT 11.2.9
    1970 காமன் கணைக்கு ஓர் இலக்கம் ஆய் * நலத்தின் மிகு *
    பூ மரு கோலம் * நம் பெண்மை சிந்தித்து இராது போய் **
    தூ மலர் நீர் கொடு * தோழி நாம் தொழுது ஏத்தினால் *
    கார் முகில் வண்ணரைக் * கண்களால் காணல் ஆம்கொலோ?
  • PT 11.2.10
    1971 ## வென்றி விடை உடன் * ஏழ் அடர்த்த அடிகளை *
    மன்றில் மலி புகழ் * மங்கை மன் கலிகன்றி சொல் **
    ஒன்று நின்ற ஒன்பதும் * உரைப்பவர் தங்கள்மேல் *
    என்றும் நில்லா வினை * ஒன்றும் சொல்லில் உலகிலே