PT 11.3.4

வெண்ணெயுண்டவரை யாம் அறிவோம்

1975 அறியோமேயென்று உரைக்கலாமே? எமக்கு *
வெறியார்பொழில்சூழ் வியன்குடந்தைமேவி *
சிறியானோர்பிள்ளையாய் மெள்ளநடந்திட்டு *
உறியார்நறுவெண்ணெய் உண்டுகந்தார்தம்மையே.
1975 aṟiyome ĕṉṟu * uraikkal āme ĕmakku- *
vĕṟi ār pŏzhil cūzh * viyaṉ kuṭantai mevi **
ciṟiyāṉ or pil̤l̤ai āy * mĕl̤l̤a naṭantiṭṭu *
uṟi ār naṟu vĕṇṇĕy * uṇṭu ukantār-tammaiye?

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1975. The lord who was born as a little child and toddled stole fragrant ghee from the uri and ate it happily. He stays in beautiful Thirukkudandai surrounded with fragrant groves. How could I say I don’t know him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெறி ஆர் மணம் மிக்க; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; வியன் வியக்கத்தக்க; குடந்தை மேவி குடந்தையிலிருக்கும்; சிறியான் ஓர் ஒப்பற்ற சிறு; பிள்ளையாய் குழந்தையாய் கண்ணன்; மெள்ள நடந்திட்டு மெள்ள நடந்து வந்து; உறி ஆர் உறியிலிருக்கும்; நறு மணம் மிக்க; வெண்ணெய் வெண்ணெயை; உண்டு உகந்தார் உண்டு உகந்த; தம்மையே பெருமானை; அறியோமே அறியோம்; என்று உரைக்கல் என்று கூறுவது; ஆமே எமக்கு எமக்கு தகுமோ?