PT 11.3.8

எம்பெருமானைப் பாடிநின்றாடுவோம்

1979 பாடோமே? எந்தைபெருமானை * பாடிநின்று
ஆடோமே? ஆயிரம்பேரானை * பேர்நினைந்து
சூடோமே? சூடும்துழாயலங்கல்சூடி * நாம்
கூடோமே? கூடக்குறிப்பாகில்நன்னெஞ்சே!
1979 pāṭome-ĕntai pĕrumāṉai? * pāṭiniṉṟu
āṭome- * āyiram perāṉai? * per niṉaintu
cūṭome- ** cūṭum tuzhāy alaṅkal? cūṭi * nām
kūṭome-kūṭak * kuṟippu ākil? nal nĕñce

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1979. O good heart, we want go join him. Let us dance and sing the praise of our dear lord. Let us think of the thousand-named god and let us wear his thulasi garland.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நெஞ்சே! நல்ல மனமே!; எந்தை பெருமானை எம் பெருமானை; பாடோமே? பாடமாட்டோமோ?; ஆயிரம் ஆயிரம்; பேரானை நாமங்களுடையவனை; பாடி நின்று வாயாரப் பாடி நின்று; ஆடோமே? ஆட மாட்டோமோ?; பேர் அவன் நாமங்களை; நினைந்து நினைத்து சிந்தித்து; சூடும் துழாய் அவன் அணிந்த துளசி; அலங்கல் மாலையை; சூடோமே? அணியமாட்டோமோ?; சூடி நமக்கு ருசி உண்டாகில்; கூட அவனுக்கு நம்மோடு கூட; குறிப்பு ஆகில் இசைவு இருக்குமாகில்; நாம் கூடோமே? நாம் கூடமாட்டோமா?