PT 11.3.2

நெடுமாலைப் பாடுவதால் ஒளி பெற்றேன்

1973 இருந்தான்என்னுள்ளத்து இறைவன் * கறைசேர்
பருந்தாட்களிற்றுக்குஅருள்செய்த * செங்கண்
பெருந்தோள்நெடுமாலைப் பேர்பாடியாட *
வருந்தாதுஎன்கொங்கை ஒளிமன்னும்அன்னே!
1973 iruntāṉ ĕṉ ul̤l̤attu * iṟaivaṉ kaṟai cer *
parun tāl̤ kal̤iṟṟukku * arul̤ cĕyta cĕṅ kaṇ **
pĕrun tol̤ nĕṭumālaip * per pāṭi āṭa *
varuntātu ĕṉ kŏṅkai * ŏl̤i maṉṉum aṉṉe

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1973. She says, “He stays in my heart. When the elephant Gajendra with huge legs was caught by a crocodile, he came and saved him and gave him his grace. I sing and dance, praising the names of broad-armed Nedumal and my breasts do not grow slack or lose their bright color. What is this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னே! தாய் போன்ற தோழியே!; இறைவன் இறைவன்; என் உள்ளத்து என் உள்ளத்தில்; இருந்தான் எப்பொழுதும் இருக்கிறான்; கறை சேர் உரல் போன்று; பருந் தாள் பருத்த கால்களையுடைய; களிற்றுக்கு யானைக்கு அன்று; அருள் செய்த அருள் செய்தவனும்; செங் கண் செந்தாமரைக் கண்ணனும்; பெரும் பெரிய; தோள் தோள்களையுடையவனுமான; நெடு மாலை பெருமானின்; பேர் பாடி ஆட நாமங்களை பாடி ஆட; என் கொங்கை என் மார்புகள்; வருந்தாது வருந்தாது; ஒளி மன்னும் தன் நிறம் பெற்று ஒளிருகிறது