Chapter 1

Songs of pain from separation - (குன்றம் ஒன்று)

பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்
Songs of pain from separation - (குன்றம் ஒன்று)
In this section, Āzhvār, assuming the state of the divine consort (*Pirāṭṭi*), expresses the pain of separation (*viraha-tāpam*) caused by elements like the breeze. Āzhvār sings, pointing out how the very Supreme Lord—who incarnated as **Rāma** and **Kṛṣṇa** to uplift the world—now becomes the cause of suffering for them.
ஆழ்வார் பிராட்டி நிலையில் இருந்துகொண்டு பாடும் இப்பகுதியில், தென்றல் முதலானவற்றால் தமக்கு ஏற்பட்டிருக்கும் பிரிவு நோயை வெளிப்படுத்துகிறார்; இராமனாகவும் கண்ணனாகவும் அவதரித்து உலகை வாழ்வித்த பெருமான் தமக்குத் துன்பம் தருவதைச் சுட்டிக் காட்டிப் பாடுகிறார்.
Verses: 1952 to 1961
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Getting freed from all hurdles
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 11.1.1

1952 குன்றமொன்றெடுத்தேந்தி * மாமழை
அன்றுகாத்தஅம்மான் * அரக்கரை
வென்றவில்லியார் வீரமேகொலோ? *
தென்றல்வந்து தீவீசும்என்செய்கேன்? (2)
1952 ## குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி * மா மழை
அன்று காத்த அம்மான் ** அரக்கரை
வென்ற வில்லியார் * வீரமே கொலோ *
தென்றல் வந்து * தீ வீசும்? என் செய்கேன்
1952 ## kuṉṟam ŏṉṟu ĕṭuttu enti * mā mazhai
aṉṟu kātta ammāṉ ** arakkarai
vĕṉṟa villiyār * vīrame kŏlo- *
tĕṉṟal vantu * tī vīcum? ĕṉ cĕykeṉ

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1952. She says, “Our divine god protected the cows and cowherds from the storm by carrying Govardhanā mountain. Heroic, he fought with the Rākshasas with his victorious bow and defeated them. Does the breeze blow on me as if it were fire because I think of his heroic deeds? What can I do?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பு ஒரு சமயம்; குன்றம் ஒன்று ஒப்பற்ற கோவர்த்தன மலையை; எடுத்து ஏந்தி குடையாக எடுத்து; மா மழை காத்த பெரு மழையைக் காத்த; அம்மான் கண்ணனும்; அரக்கரை வென்ற அரக்கர்களை வென்ற; வில்லியார் வில்லையுடையவருமான ராமனின்; வீரமே கொலோ வீரத்தினாலோ; தென்றல் தென்றல் காற்று; வந்து நானிருக்கு இடம் வந்து; தீ வீசும் நெருப்பை வீசுகின்றது; என் செய்கேன்! நான் என் செய்வேன்!

PT 11.1.2

1953 காரும்வார்பனிக் கடலும், அன்னவன் *
தாரும்மார்வமும் கண்டதண்டமோ? *
சோருமாமுகில் துளியினூடுவந்து *
ஈரவாடைதான் ஈருமென்னையே.
1953 காரும் வார் பனிக் * கடலும் அன்னவன் *
தாரும் மார்வமும் * கண்ட தண்டமோ **
சோரும் மா முகில் * துளியினூடு வந்து *
ஈர வாடை தான் * ஈரும் என்னையே?
1953 kārum vār paṉik * kaṭalum aṉṉavaṉ *
tārum mārvamum * kaṇṭa taṇṭamo- **
corum mā mukil * tul̤iyiṉūṭu vantu *
īra vāṭai-tāṉ * īrum ĕṉṉaiye?

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1953. She says, “The cold wind hurts me as the dark clouds pour down drops of rain. Am I being punished because I long to see the chest and the garlands of the dark god colored like a cloud or the ocean? What can I do?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காரும் பரந்த காளமேகத்தையும்; வார் பனிக் கடலும் குளிர்ந்த கடலையும்; அன்னவன் ஒத்திருக்கும் பெருமானின்; தாரும் துளசி மாலையையும்; மார்வமும் திருமார்பையும்; கண்ட காணவேண்டும் என்று; தண்டமோ? விரும்பியதற்கு தண்டனையோ?; சோரு மா முகில் வர்ஷிக்கும் மேகத்தின்; துளியினூடு நீர்துளிக்குள் குளிர்ச்சியை ஏற்று; ஈர வாடை தான் ஈரக் காற்று வந்து; என்னையே என்னை; ஈரும் துன்புறுத்துகின்றனவே!

PT 11.1.3

1954 சங்குமாமையும் தளருமேனிமேல் *
திங்கள்வெங்கதிர் சீறும்என்செய்கேன்? *
பொங்குவெண்திரைப் புணரிவண்ணனார் *
கொங்கலார்ந்ததார் கூவும்என்னையே.
1954 சங்கும் மாமையும் * தளரும் மேனிமேல் *
திங்கள் வெம் கதிர் * சீறும் என் செய்கேன்? **
பொங்கு வெண் திரைப் * புணரி வண்ணனார் *
கொங்கு அலர்ந்த தார் * கூவும் என்னையே
1954 caṅkum māmaiyum * tal̤arum meṉimel *
tiṅkal̤ vĕm katir * cīṟum-ĕṉ cĕykeṉ?- **
pŏṅku vĕṇ tiraip * puṇari vaṇṇaṉār *
kŏṅku alarnta tār * kūvum ĕṉṉaiye

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1954. She says, “With its rays the moon is angry with me and makes my pale body weak. My conch bangles become loose. What can I do? He has the color of the ocean that rises with white waves. What can I do? His thulasi garland with blooming flowers that drip honey calls to me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சங்கும் கைவளைகளும்; மாமையும் பசலை நிறமும்; தளரும் சோர்ந்திருக்கும்; மேனிமேல் என் உடலின் மேல்; திங்கள் சந்திரனின்; வெம் கதிர் கொடிய கிரணங்களானவை; சீறும் சீறுகின்றன; என் செய்கேன்? என் செய்வேன்?; பொங்கு பொங்கும் கடல் போன்ற; வெண் திரை அலைகளையுடைய; புணரி வண்ணனார் நிறமுடையவனின்; கொங்கு அலர்ந்த மலர்ந்த மணம் மிக்க; தார் துளசி மாலை; என்னையே என்னை புறப்படவில்லையோ என்று; கூவும் கூவி அழைக்கிறது என் செய்வேன்

PT 11.1.4

1955 அங்கோராய்க்குலத்துள் வளர்ந்துசென்று *
அங்கோர் தாயுருவாகிவந்தவள் *
கொங்கைநஞ்சுண்ட கோயின்மைகொலோ? *
திங்கள்வெங்கதிர் சீறுகின்றதே.
1955 அங்கு ஓர் ஆய்க்குலத்துள் * வளர்ந்து சென்று *
அங்கு ஓர் * தாய் உரு ஆகி வந்தவள் *
கொங்கை நஞ்சு உண்ட * கோயின்மை கொலோ *
திங்கள் வெம் கதிர் * சீறுகின்றதே?
1955 aṅku or āykkulattul̤ * val̤arntu cĕṉṟu *
aṅku or * tāy uru āki vantaval̤ *
kŏṅkai nañcu uṇṭa * koyiṉmai kŏlo- *
tiṅkal̤ vĕm katir * cīṟukiṉṟate?

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1955. She says, “He were taken to the clan of the cowherd village and raised there. When Putanā came as a mother he drank milk from her breasts and killed her. Do the rays of the moon burn so hot because I think of his heroic deeds?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அங்கு ஓர் இரவில் திருவாய்ப் பாடியில்; ஆய்க்குலத்துள் ஆயர்குலத்தில்; வளர்ந்து சென்று வளர்ந்த போது; அங்கு ஓர் தாய் அங்கு ஓர் தாய்; உரு ஆகி உருவத்தோடு வந்த; வந்தவள் பூதனையின்; கொங்கை மார்பகத்திலிருந்த; நஞ்சு உண்ட விஷத்தை உண்ட; கோயின்மை மாயச்செயலையுடைய; கொலோ கண்ணனை பின் பற்றியதாலோ; திங்கள் சந்திரனின்; வெம் கதிர் கொடிய கிரணங்கள்; சீறுகின்றதே சீறுவதானது

PT 11.1.5

1956 அங்குஒராளரியாய் அவுணனை *
பங்கமா இருகூறுசெய்தவன் *
மங்குல்மாமதி வாங்கவேகொலோ? *
பொங்குமாகடல் புலம்புகின்றதே.
1956 அங்கு ஓர் ஆள் அரி ஆய் * அவுணனை
பங்கமா * இரு கூறு செய்தவன் **
மங்குல் மா மதி * வாங்கவே கொலோ *
பொங்கு மா கடல் * புலம்புகின்றதே?
1956 aṅku or āl̤ ari āy * avuṇaṉai
paṅkamā * iru kūṟu cĕytavaṉ **
maṅkul mā mati * vāṅkave kŏlo- *
pŏṅku mā kaṭal * pulampukiṉṟate?

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1956. She says, “He took the form of a man-lion and split the chest of Hiranyan in two. Does the ocean cry in its loneliness because it wants to have the bright moon that the god makes wane to darkness?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அங்கு ஓர் பிரஹ்லாதனைக் காக்க ஒரு; ஆள் அரி ஆய் நரசிம்மனாக அவதரித்து; அவுணனை அசுரனான இரணியனை; பங்கமா மானபங்கம் பண்ணி; இரு கூறு இரு துண்டாகக் கிழித்த; செய்தவன் பெருமான்; வாங்கவே கடலிலிருந்து கடைந்து; கொலோ வெளிக்கொண்டு வந்தான் என்பதாலோ; மா மதி சந்திரனை; மங்குல் ஆகாயத்தில் இருக்கும்படி வைத்து; பொங்கு அலைகளோடு கூடின; மா கடல் பெரும் கடலானது; புலம்புகின்றதே என்னைப் போல் புலம்புகின்றது

PT 11.1.6

1957 சென்றுவார்சிலைவளைத்து * இலங்கையை
வென்றவில்லியார் வீரமேகொலோ? *
முன்றில்பெண்ணைமேல் முளரிக்கூட்டகத்து *
அன்றிலின்குரல் அடரும்என்னையே.
1957 சென்று வார் * சிலை வளைத்து * இலங்கையை
வென்ற வில்லியார் * வீரமே கொலோ **
முன்றில் பெண்ணைமேல் * முளரிக் கூட்டகத்து *
அன்றிலின் குரல் * அடரும் என்னையே?
1957 cĕṉṟu vār * cilai val̤aittu * ilaṅkaiyai
vĕṉṟa villiyār * vīrame kŏlo- **
muṉṟil pĕṇṇaimel * mul̤arik kūṭṭakattu *
aṉṟiliṉ kural * aṭarum ĕṉṉaiye?

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1957. She says, “He went to Lankā, bent his victorious bow and fought with the Rākshasas. On the palm tree, the andril bird in its nest made of lotuses coos and hurts me because I think of the heroic deeds of the lord. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சென்று எதிரிகளிருக்குமிடம் போய்; வார் சிலை பெரிய வில்லை; வளைத்து நாணேற்றி வளைத்து; இலங்கையை இலங்கையை; வென்ற வில்லியார் அழித்த பெருமானின்; வீரமே கொலோ பராக்கிரமத்தாலோ; முன்றில் வாசலிலுள்ள முற்றத்தில்; பெண்ணைமேல் பனைமரத்தின் மேலே; முளரி தாமரைப் பூவாலும் தண்டாலும் பிணைத்த; கூட்டகத்து கூட்டிலே இருக்கும்; அன்றிலின் குரல் அன்றில் பறவையின் குரல்; அடரும் என்னையே என்னை வருத்துகின்றது

PT 11.1.7

1958 பூவைவண்ணனார் புள்ளின்மேல்வர *
மேவிநின்றுநான் கண்டதண்டமோ? *
வீவிலைங்கணை வில்லிஅம்புகோத்து *
ஆவியே இலக்காகஎய்வதே.
1958 பூவை வண்ணனார் * புள்ளின்மேல் வர *
மேவி நின்று நான் * கண்ட தண்டமோ **
வீவு இல் ஐங்கணை * வில்லி அம்பு கோத்து *
ஆவியே இலக்கு ஆக எய்வதே?
1958 pūvai vaṇṇaṉār * pul̤l̤iṉmel vara *
mevi niṉṟu nāṉ * kaṇṭa taṇṭamo- **
vīvu il aiṅkaṇai * villi ampu kottu *
āviye ilakku āka ĕyvate?

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1958. She says, “Kāma comes carrying five flower arrows, shoots them at me without stopping and makes me suffer. Am I being punished because I saw the lord as dark as a kāyām flower when he came on Garudā and fell in love with him?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஐங்கணை வில்லி பஞ்சபாணனான மன்மதன்; வீவு இல் க்ஷணகாலமும் ஓய்வில்லாமல்; அம்பு கோத்து பாணங்களைத் தொடுத்து; ஆவியே இலக்கு என் உயிரையே லக்ஷ்யமாக; எய்வதே! கொண்டு பிரயோகிப்பதான இது; பூவை காயாம்பூ; வண்ணனார் நிறமுடைய பெருமான்; புள்ளின் மேல் வர கருடன் மேல் வர; மேவி நான் விரும்பி; நின்று நின்று வணங்கியதற்கு; நான் கண்ட நான் கண்ட; தண்டமோ? தண்டனையோ?

PT 11.1.8

1959 மால்இனந்துழாய் வரும்என்நெஞ்சகம் *
மாலின்அந்துழாய் வந்துஎன்னுள்புக *
கோலவாடையும் கொண்டுவந்தது * ஓர்
ஆலிவந்ததால் அரிதுகாவலே.
1959 மால் இனம் துழாய் * வரும் என் நெஞ்சகம் *
மாலின் அம் துழாய் * வந்து என் உள்புக **
கோல வாடையும் * கொண்டு வந்தது ஓர் *
ஆலி வந்ததால் * அரிது காவலே
1959 māl iṉam tuzhāy * varum ĕṉ nĕñcakam *
māliṉ am tuzhāy * vantu ĕṉ ul̤puka **
kola vāṭaiyum * kŏṇṭu vantatu or *
āli vantatāl- * aritu kāvale

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1959. She says, “When the thought of the thulasi garland that adorns him entered my heart, it came along with the lovely, cool wind dripping with drops of rain. It will be very hard for my life to be saved. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சகம் என் மனமானது; மால் அப்பெருமானிடம்; இனம் தோன்றின மோகத்தால்; துழாய் துழாவி இங்குமங்கும்; வரும் தேடித் திரிகிறது; மாலின் அப் பெருமானின்; அம் துழாய் அழகிய துளசி மாலை; வந்து என்னுள் புக என் நினைவுக்குவர; கோல மணம் மிக்க; வாடையும் வாடைக் காற்றையும்; கொண்டு தன்னுடன் அழைத்து; வந்தது ஓர் முன்பே வந்தது; ஆலி வந்ததால் சிறு துளி வந்ததால்; காவலே! என்னைக் காத்துக் கொள்வது; அரிது எளிதாகத் தோன்றவில்லை

PT 11.1.9

1960 கொண்டையொண்கணும்துயிலும் * என்னிறம்
பண்டுபண்டுபோலொக்கும் * மிக்கசீர்த்
தொண்டரிட்ட பூந்துளவின்வாசமே *
வண்டுகொண்டுவந்து ஊதுமாகிலே.
1960 கெண்டை ஒண் கணும் துயிலும் * என் நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் ** மிக்க சீர்த்
தொண்டர் இட்ட * பூந் துளவின் வாசமே *
வண்டு கொண்டுவந்து * ஊதுமாகிலே
1960 kĕṇṭai ŏṇ kaṇum tuyilum * ĕṉ niṟam
paṇṭu paṇṭu pol ŏkkum ** -mikka cīrt
tŏṇṭar iṭṭa * pūn tul̤aviṉ vācame *
vaṇṭu kŏṇṭuvantu * ūtumākile

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BV. 9-26

Simple Translation

1960. She says, “If bees bring and spread the fragrance of the beautiful fresh thulasi garland that devotees use to decorate him, my eyes that are like kendai fish will close in sleep and the pale color of my body will change to the brightness it had before. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மிக்க சீர் நற்குணங்களுடைய; தொண்டர் தொண்டர்கள்; இட்ட ஸமர்ப்பித்த; பூந் துளவின் துளசி மாலையின்; வாசமே மணத்தை; வண்டு வண்டுகள்; கொண்டு வந்து கொண்டு வந்து; ஊதுமாகிலே ஊதுமாகில்; கெண்டை கெண்டை மீன்போன்ற அழகிய; ஒண் கணும் என் கண்களும்; துயிலும் உறக்கம் கொள்ளும்; என் நிறம் என் நிறமும்; பண்டு பண்டு போல் பழையபடியே; ஒக்கும் ஒளி பெரும்

PT 11.1.10

1961 அன்றுபாரதத்து ஐவர்தூதனாய் *
சென்றமாயனைச் செங்கண்மாலினை *
மன்றிலார்புகழ் மங்கைவாள்கலி
கன்றி * சொல்வல்லார்க்கு அல்லலில்லையே. (2)
1961 ## அன்று பாரதத்து * ஐவர் தூதனாய் *
சென்ற மாயனைச் * செங் கண் மாலினை **
மன்றில் ஆர் புகழ் * மங்கை வாள் கலி
கன்றி * சொல் வல்லார்க்கு * அல்லல் இல்லையே
1961 ## aṉṟu pāratattu * aivar tūtaṉāy *
cĕṉṟa māyaṉaic * cĕṅ kaṇ māliṉai **
maṉṟil ār pukazh * maṅkai vāl̤ kali-
kaṉṟi * cŏl vallārkku * allal illaiye

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1961. Kaliyan, the famous chief who carries a sword and is praised by all in Thirumangai composed pāsurams on our beautiful-eyed Māyan who went as a messenger for the five Pāndavās in the Bhārathā war. If devotees learn and recite these pāsurams they will have no trouble in life.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பொரு சமயம்; பாரதத்து பாரத யுத்தத்தில்; ஐவர் பஞ்சபாண்டவர்க்கு; தூதனாய் தூதனாய்; சென்ற மாயனை சென்ற மாயனை; செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலினை எம்பெருமானை குறித்து; மன்றில் ஆர் மன்றங்களெல்லாம்; புகழ் மங்கை புகழப்பாடும் மங்கை மன்னன்; வாள் வாள் படையுடைய; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; சொல் அருளிச்செய்த பாசுரங்களை; வல்லார்க்கு ஓதவல்லார்க்கு; அல்லல் இல்லையே துன்பம் ஏற்படாது