PT 11.1.4

சந்திரன் வெங்கதிர் வீசுகிறதே! ஏன்?

1955 அங்கோராய்க்குலத்துள் வளர்ந்துசென்று *
அங்கோர் தாயுருவாகிவந்தவள் *
கொங்கைநஞ்சுண்ட கோயின்மைகொலோ? *
திங்கள்வெங்கதிர் சீறுகின்றதே.
1955 aṅku or āykkulattul̤ * val̤arntu cĕṉṟu *
aṅku or * tāy uru āki vantaval̤ *
kŏṅkai nañcu uṇṭa * koyiṉmai kŏlo- *
tiṅkal̤ vĕm katir * cīṟukiṉṟate?

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1955. She says, “He were taken to the clan of the cowherd village and raised there. When Putanā came as a mother he drank milk from her breasts and killed her. Do the rays of the moon burn so hot because I think of his heroic deeds?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அங்கு ஓர் இரவில் திருவாய்ப் பாடியில்; ஆய்க்குலத்துள் ஆயர்குலத்தில்; வளர்ந்து சென்று வளர்ந்த போது; அங்கு ஓர் தாய் அங்கு ஓர் தாய்; உரு ஆகி உருவத்தோடு வந்த; வந்தவள் பூதனையின்; கொங்கை மார்பகத்திலிருந்த; நஞ்சு உண்ட விஷத்தை உண்ட; கோயின்மை மாயச்செயலையுடைய; கொலோ கண்ணனை பின் பற்றியதாலோ; திங்கள் சந்திரனின்; வெம் கதிர் கொடிய கிரணங்கள்; சீறுகின்றதே சீறுவதானது