PT 11.1.3

நிலவு சீறுகிறதே! என் செய்வேன் ?

1954 சங்குமாமையும் தளருமேனிமேல் *
திங்கள்வெங்கதிர் சீறும்என்செய்கேன்? *
பொங்குவெண்திரைப் புணரிவண்ணனார் *
கொங்கலார்ந்ததார் கூவும்என்னையே.
1954 caṅkum māmaiyum * tal̤arum meṉimel *
tiṅkal̤ vĕm katir * cīṟum-ĕṉ cĕykeṉ?- **
pŏṅku vĕṇ tiraip * puṇari vaṇṇaṉār *
kŏṅku alarnta tār * kūvum ĕṉṉaiye

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1954. She says, “With its rays the moon is angry with me and makes my pale body weak. My conch bangles become loose. What can I do? He has the color of the ocean that rises with white waves. What can I do? His thulasi garland with blooming flowers that drip honey calls to me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சங்கும் கைவளைகளும்; மாமையும் பசலை நிறமும்; தளரும் சோர்ந்திருக்கும்; மேனிமேல் என் உடலின் மேல்; திங்கள் சந்திரனின்; வெம் கதிர் கொடிய கிரணங்களானவை; சீறும் சீறுகின்றன; என் செய்கேன்? என் செய்வேன்?; பொங்கு பொங்கும் கடல் போன்ற; வெண் திரை அலைகளையுடைய; புணரி வண்ணனார் நிறமுடையவனின்; கொங்கு அலர்ந்த மலர்ந்த மணம் மிக்க; தார் துளசி மாலை; என்னையே என்னை புறப்படவில்லையோ என்று; கூவும் கூவி அழைக்கிறது என் செய்வேன்