PT 11.1.10

இவற்றைப் பாடுவோர்க்குத் துன்பம் இல்லை

1961 அன்றுபாரதத்து ஐவர்தூதனாய் *
சென்றமாயனைச் செங்கண்மாலினை *
மன்றிலார்புகழ் மங்கைவாள்கலி
கன்றி * சொல்வல்லார்க்கு அல்லலில்லையே. (2)
1961 ## aṉṟu pāratattu * aivar tūtaṉāy *
cĕṉṟa māyaṉaic * cĕṅ kaṇ māliṉai **
maṉṟil ār pukazh * maṅkai vāl̤ kali-
kaṉṟi * cŏl vallārkku * allal illaiye

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1961. Kaliyan, the famous chief who carries a sword and is praised by all in Thirumangai composed pāsurams on our beautiful-eyed Māyan who went as a messenger for the five Pāndavās in the Bhārathā war. If devotees learn and recite these pāsurams they will have no trouble in life.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பொரு சமயம்; பாரதத்து பாரத யுத்தத்தில்; ஐவர் பஞ்சபாண்டவர்க்கு; தூதனாய் தூதனாய்; சென்ற மாயனை சென்ற மாயனை; செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலினை எம்பெருமானை குறித்து; மன்றில் ஆர் மன்றங்களெல்லாம்; புகழ் மங்கை புகழப்பாடும் மங்கை மன்னன்; வாள் வாள் படையுடைய; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; சொல் அருளிச்செய்த பாசுரங்களை; வல்லார்க்கு ஓதவல்லார்க்கு; அல்லல் இல்லையே துன்பம் ஏற்படாது