PT 11.1.7

மன்மதன் என்மீது அம்பு எய்கின்றானே!

1958 பூவைவண்ணனார் புள்ளின்மேல்வர *
மேவிநின்றுநான் கண்டதண்டமோ? *
வீவிலைங்கணை வில்லிஅம்புகோத்து *
ஆவியே இலக்காகஎய்வதே.
1958 pūvai vaṇṇaṉār * pul̤l̤iṉmel vara *
mevi niṉṟu nāṉ * kaṇṭa taṇṭamo- **
vīvu il aiṅkaṇai * villi ampu kottu *
āviye ilakku āka ĕyvate?

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1958. She says, “Kāma comes carrying five flower arrows, shoots them at me without stopping and makes me suffer. Am I being punished because I saw the lord as dark as a kāyām flower when he came on Garudā and fell in love with him?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஐங்கணை வில்லி பஞ்சபாணனான மன்மதன்; வீவு இல் க்ஷணகாலமும் ஓய்வில்லாமல்; அம்பு கோத்து பாணங்களைத் தொடுத்து; ஆவியே இலக்கு என் உயிரையே லக்ஷ்யமாக; எய்வதே! கொண்டு பிரயோகிப்பதான இது; பூவை காயாம்பூ; வண்ணனார் நிறமுடைய பெருமான்; புள்ளின் மேல் வர கருடன் மேல் வர; மேவி நான் விரும்பி; நின்று நின்று வணங்கியதற்கு; நான் கண்ட நான் கண்ட; தண்டமோ? தண்டனையோ?