PT 11.1.2

வாடைக் காற்று என்னை வாட்டுகிறதே!

1953 காரும்வார்பனிக் கடலும், அன்னவன் *
தாரும்மார்வமும் கண்டதண்டமோ? *
சோருமாமுகில் துளியினூடுவந்து *
ஈரவாடைதான் ஈருமென்னையே.
1953 kārum vār paṉik * kaṭalum aṉṉavaṉ *
tārum mārvamum * kaṇṭa taṇṭamo- **
corum mā mukil * tul̤iyiṉūṭu vantu *
īra vāṭai-tāṉ * īrum ĕṉṉaiye?

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1953. She says, “The cold wind hurts me as the dark clouds pour down drops of rain. Am I being punished because I long to see the chest and the garlands of the dark god colored like a cloud or the ocean? What can I do?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காரும் பரந்த காளமேகத்தையும்; வார் பனிக் கடலும் குளிர்ந்த கடலையும்; அன்னவன் ஒத்திருக்கும் பெருமானின்; தாரும் துளசி மாலையையும்; மார்வமும் திருமார்பையும்; கண்ட காணவேண்டும் என்று; தண்டமோ? விரும்பியதற்கு தண்டனையோ?; சோரு மா முகில் வர்ஷிக்கும் மேகத்தின்; துளியினூடு நீர்துளிக்குள் குளிர்ச்சியை ஏற்று; ஈர வாடை தான் ஈரக் காற்று வந்து; என்னையே என்னை; ஈரும் துன்புறுத்துகின்றனவே!