PT 11.1.8

என் உயிரைக் காத்துக்கொள்வது அரிது

1959 மால்இனந்துழாய் வரும்என்நெஞ்சகம் *
மாலின்அந்துழாய் வந்துஎன்னுள்புக *
கோலவாடையும் கொண்டுவந்தது * ஓர்
ஆலிவந்ததால் அரிதுகாவலே.
1959 māl iṉam tuzhāy * varum ĕṉ nĕñcakam *
māliṉ am tuzhāy * vantu ĕṉ ul̤puka **
kola vāṭaiyum * kŏṇṭu vantatu or *
āli vantatāl- * aritu kāvale

Ragam

Kānada / கானடா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1959. She says, “When the thought of the thulasi garland that adorns him entered my heart, it came along with the lovely, cool wind dripping with drops of rain. It will be very hard for my life to be saved. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சகம் என் மனமானது; மால் அப்பெருமானிடம்; இனம் தோன்றின மோகத்தால்; துழாய் துழாவி இங்குமங்கும்; வரும் தேடித் திரிகிறது; மாலின் அப் பெருமானின்; அம் துழாய் அழகிய துளசி மாலை; வந்து என்னுள் புக என் நினைவுக்குவர; கோல மணம் மிக்க; வாடையும் வாடைக் காற்றையும்; கொண்டு தன்னுடன் அழைத்து; வந்தது ஓர் முன்பே வந்தது; ஆலி வந்ததால் சிறு துளி வந்ததால்; காவலே! என்னைக் காத்துக் கொள்வது; அரிது எளிதாகத் தோன்றவில்லை