Chapter 1

Songs of pain from separation - (குன்றம் ஒன்று)

பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்
Songs of pain from separation - (குன்றம் ஒன்று)

In this section, Āzhvār, assuming the state of the divine consort (Pirāṭṭi), expresses the pain of separation (viraha-tāpam) caused by elements like the breeze. Āzhvār sings, pointing out how the very Supreme Lord—who incarnated as Rāma and Kṛṣṇa to uplift the world—now becomes the cause of suffering for them.

ஆழ்வார் பிராட்டி நிலையில் இருந்துகொண்டு பாடும் இப்பகுதியில், தென்றல் முதலானவற்றால் தமக்கு ஏற்பட்டிருக்கும் பிரிவு நோயை வெளிப்படுத்துகிறார்; இராமனாகவும் கண்ணனாகவும் அவதரித்து உலகை வாழ்வித்த பெருமான் தமக்குத் துன்பம் தருவதைச் சுட்டிக் காட்டிப் பாடுகிறார்.

Verses: 1952 to 1961
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Getting freed from all hurdles
  • PT 11.1.1
    1952 ## குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி * மா மழை
    அன்று காத்த அம்மான் ** அரக்கரை
    வென்ற வில்லியார் * வீரமே கொலோ *
    தென்றல் வந்து * தீ வீசும்? என் செய்கேன்
  • PT 11.1.2
    1953 காரும் வார் பனிக் * கடலும் அன்னவன் *
    தாரும் மார்வமும் * கண்ட தண்டமோ **
    சோரும் மா முகில் * துளியினூடு வந்து *
    ஈர வாடை தான் * ஈரும் என்னையே?
  • PT 11.1.3
    1954 சங்கும் மாமையும் * தளரும் மேனிமேல் *
    திங்கள் வெம் கதிர் * சீறும் என் செய்கேன்? **
    பொங்கு வெண் திரைப் * புணரி வண்ணனார் *
    கொங்கு அலர்ந்த தார் * கூவும் என்னையே
  • PT 11.1.4
    1955 அங்கு ஓர் ஆய்க்குலத்துள் * வளர்ந்து சென்று *
    அங்கு ஓர் * தாய் உரு ஆகி வந்தவள் *
    கொங்கை நஞ்சு உண்ட * கோயின்மை கொலோ *
    திங்கள் வெம் கதிர் * சீறுகின்றதே?
  • PT 11.1.5
    1956 அங்கு ஓர் ஆள் அரி ஆய் * அவுணனை
    பங்கமா * இரு கூறு செய்தவன் **
    மங்குல் மா மதி * வாங்கவே கொலோ *
    பொங்கு மா கடல் * புலம்புகின்றதே?
  • PT 11.1.6
    1957 சென்று வார் * சிலை வளைத்து * இலங்கையை
    வென்ற வில்லியார் * வீரமே கொலோ **
    முன்றில் பெண்ணைமேல் * முளரிக் கூட்டகத்து *
    அன்றிலின் குரல் * அடரும் என்னையே?
  • PT 11.1.7
    1958 பூவை வண்ணனார் * புள்ளின்மேல் வர *
    மேவி நின்று நான் * கண்ட தண்டமோ **
    வீவு இல் ஐங்கணை * வில்லி அம்பு கோத்து *
    ஆவியே இலக்கு ஆக எய்வதே?
  • PT 11.1.8
    1959 மால் இனம் துழாய் * வரும் என் நெஞ்சகம் *
    மாலின் அம் துழாய் * வந்து என் உள்புக **
    கோல வாடையும் * கொண்டு வந்தது ஓர் *
    ஆலி வந்ததால் * அரிது காவலே
  • PT 11.1.9
    1960 கெண்டை ஒண் கணும் துயிலும் * என் நிறம்
    பண்டு பண்டு போல் ஒக்கும் ** மிக்க சீர்த்
    தொண்டர் இட்ட * பூந் துளவின் வாசமே *
    வண்டு கொண்டுவந்து * ஊதுமாகிலே
  • PT 11.1.10
    1961 ## அன்று பாரதத்து * ஐவர் தூதனாய் *
    சென்ற மாயனைச் * செங் கண் மாலினை **
    மன்றில் ஆர் புகழ் * மங்கை வாள் கலி
    கன்றி * சொல் வல்லார்க்கு * அல்லல் இல்லையே