(அரிது காவல் மிகவும் கிலேஸிக்க தோழி பொறுக்க மாட்டாமல் கண் உறங்க நான் என் செய்கேன் நாயகன் ஸ்வ தந்த்ரன் நீ பொறுக்க வல்லவள் அல்ல நானும் உன்னுடன் கிலேசிக்கவா அது பொறுக்க மாட்டாமல் எங்கே இருந்தாலும் அவனுக்கு புரிவர் மிக்க சீர் தொண்டர் மங்களா சாசன பரர்கள் – சீர் கல்யாண குணங்கள் அவர்கள் சமர்ப்பித்த மாலையின் மணத்தைக் கொண்டு வந்தால் முன்பு கன்னிகை போல் மேனி நிறம் பெறுவேன் என்கிறாள்