This is the Place Where the Insatiable Nectar of Devotees Resides
அடியார்களின் ஆரமுது தங்கும் இடம் இது
1141 தாங்கரும்போர்மாலிபடப்பறவையூர்ந்து
தராதலத்தோர்குறைமுடித்ததன்மையானை *
ஆங்கரும்பிக்கண்ணீர்சோர்ந்துஅன்புகூரும்
அடியவர்கட்குஆரமுதமானான்தன்னை *
கோங்கரும்புசுரபுன்னைகுரவார்சோலைக்
குழாவரிவண்டுஇசைபாடும்பாடல்கேட்டு
தீங்கரும்புகண்வளரும்கழனிசூழ்ந்த
திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.